பக்கம் எண் :


 பலதேவன் சுவர்க்கம்புக்க சருக்கம் 419


 

கிஷண்டத்வீபமானது,   ஓதிய  -  சொல்லப்பட்ட,  நான்குனூறாயிரம்
புகைகள்    -  நாலு லட்சம் யோஜனைகள், உள்ளகன்று - உள்ளே
விஸ்தீர்ணமுடையதாகி,  வேதிகை யிரண்டின் - (தன்னை உட்புறமும்,
வெளிப்புறமும், சூழ்ந்த மஹாலவண, காளோதக, சமுத்திரங்களினுடைய
வஜ்ரவேதிகைகள்    இரண்டினால்),  சக்கவாளத்தின்   -  சக்ரவாள
கிரியைப்போல    வட்டமாய்ச்   (சூழ்ந்ததாகி), நின்று - நிலைபெற்று,
விளங்கும் - விளங்கிக் கொண்டிருக்கும், எ-று.

     ஏ - அசை.                                         (2)

893. மந்தர மிரண்டு மாண்ட குலமலை பன்னி ரண்டி
    னந்தரத் தாறு நாலே ழாமத னகத்துக் கீழ்பான்
    மந்தர மதற்கு மேல்பாற் சீதுதை வடக ரைக்கட்
    கந்திலை யென்னு நாடு காமுறுந் தகைய துண்டே.

     (இ-ள்.)    (அந்தத்   தாதகிஷண்ட  த்வீபத்திலே), மந்தரம் -
மந்தரபர்வதங்கள்,    இரண்டு - கீழ்பாகத்தில் ஒன்று மேல் பாகத்தில்
ஒன்றுமாக இரண்டாகும், மாண்ட - மாட்சிமைப்பட்ட, குலமலை - குல
பர்வதங்கள், பன்னிரண்டின் - ஒரு ஒரு பக்கத்துக்கு ஆறு ஆறு ஆக
அமைந்த பன்னிரண்டின், அந்தரத்து - அந்தரங்களிலே, (அத்தீபத்தில்
செல்லா நின்ற),   ஆறு   - (கங்கா, சிந்து, முதலாகிய) மஹா நதிகள்,
நாலேழாம்    - ஒரு    பக்கத்துக்குப் பதினாலாக இரண்டு பக்கமுஞ்
சேர்ந்து    இருபத்தெட்டாகும்,    அதனகத்து     - அப்படிப்பட்ட
அத்தீபத்தினுடைய    மத்தியில், கீழ்பால் - கிழக்குப் பக்கத்திலுள்ள,
மந்தரமதற்கு   - மந்தர பர்வதத்திற்கு, மேல் பால் - அபர பாகத்தில்,
(உள்ள),    சீதுதை - சீதோதா நதியினுடைய, வட கரைக்கண் - வட
கரையிலே,    கந்திலையென்னும்    - கந்திலா   வென்கிற, நாடு -
தேசமானது - காமுறும் - யாவர்களும் விரும்பும்படியான, தகையது -
குணமுடையதாகி, உண்டு - உள்ளது, எ-று.                   (3)

894. விலங்கல்வீ ழருவி வேழ மும்மதந் தேறல் வேரி
     கலந்துடன் செல்லு மாறு கயந்தலைப் பட்ட காலைச்
     சலஞ்சலம் பிரிந்த காத லார்தமைக் கண்ட போழ்தி
     லலங்கலங் குழவி னார்போ லமர்ந்தினி தொழுகு
                                        நாட்டுள்.

     (இ-ள்.)  விலங்கல் - பர்வதத்தினின்றும்,  வீழ்  - சொரிகின்ற,
அருவி   -   அருவிஜலமும், வேழ மும்மதம் - யானைகளது (கர்ண,
கபோல,    பீஜமென்கிற    ஸ்தானங்களினின்றொழுகும்) மூன்றுவித
மதங்களும், தேறல் - தேன் துளிகளும், வேரி - மற்ற வாசனைகளும்,
கலந்து   - கூடி, செல்லும் - செல்கின்ற, ஆறு - நதியானது, கயம் -
(நீரறாத) மடுக்களிலும் அகழியிலும் குளங்களிலும், தலைப்பட்ட காலை
- வரத்துக்   கால்களால்    வந்து சேர்ந்த காலத்திலே, சலஞ்சலம் -
(அவைகளி