பக்கம் எண் :


 பலதேவன் சுவர்க்கம்புக்க சருக்கம் 431


 

உண்டாகிய,   உருமின்  - இடியைப்போல, ஒடி - கர்ஜித்துக்கொண்டு
சென்று,  உருமிடிப்புண்ட - இடியினாலே பிளந்து வீழப்பட்ட, நீலம் -
நீல    நிறமுடைய,    மலையின்   - பர்வதம் போல, ஒன்னானை -
சத்துருவாகிய   பிரதி    வாஸுதேவனை, வீழ்ப்ப - கொன்று வீழ்த்த,
எங்கும்    - அவனைச்  சேர்ந்தவர்களுள்ள விடமெங்கும், இருள் -
அந்தகாரமானது,    பரந்திவிட்து    -     வியாபித்தது, (அதாவது :
அந்தகாரம்    போன்ற   துக்கம் அவன் பக்கத்தில் நிகழ்ந்தது; அது
வல்லாமலும்),   யாவரும் - அவன் பக்கத்தார் எவர்களும், நடுங்கி -
பயமடைந்தவர்களாகி,    வீழ்ந்தார்   -   மூர்ச்சித்தும் வீழ்ந்தார்கள்,
(அப்போது    அவ்விடத்திருந்த    சாமான்ய      ஜனங்கள்),  திரு
இலக்ஷுமியானவள்,ஒருவர்கண் - ஒருவரிடத்திலேயே - நின்றதுண்டோ
- நிலைத்திருந்ததுண்டோ,   என    -   என்று,   உரைத்திட்டார் -
பேசினார்கள், எ-று.

     ஏ - அசை.                                        (27)

918. மலைமிசை மதியி னீழற் பருதிபோன மத்த யானைத்
    தலைமிசைக் குடையி னீழல் தரணியை முழுது மாண்டார்
    நிலமிசை யின்று காறும் நின்றவ ரில்லை யேனுந்
    தலைவனைத் தானிவ் வாழி தடிந்தது கொடிதி தென்றார்.

     (இ-ள்.)   (மேலும்  அவர்கள்), மலைமிசை -பர்வதத்தின்மேல்,
மதியினீழல் - சந்திரனுடைய நிழலின் கீழே, (இருக்கின்ற), பருதிபோல்
- ஒரு   ஸுர்யனைப்போல,    மத்தம் - மதம் பொருந்திய, யானை -
யானையினுடைய, தலைமிசை - மஸ்தகத்தின் மேலே, குடையினீழல் -
வெள்ளைக்    குடையினுடைய நிழலிலே, (தங்கியிருந்து), தரணியை -
இப்பூமியை,   முழுதும்   - ஒருவருக்கும் பாகமில்லாமல் முழுமையும்,
ஆண்டார் - ஆண்ட அரசர்களில், நிலமிசை - இப்பூமிமேல், நின்றவர்
-   நிலைபெற்றிருந்தவர்கள்,   இல்லையேனும் - இல்லையென்றாலும்
(அதாவது :    தேக    போகங்கள் அனித்திய பரியாயங்களாகிலும்),
இவ்வாழிதான்    -    இச்     சக்ராயுதமானது,      தலைவனை -
தன்னையுடையவனாயிருந்த  எஜமானனை, தடிந்தது  - கொன்றதாகிய,
இது     -     இத்தன்மையான  ஸம்ஸாரமானது, கொடிது - மிகவும்
பொல்லாங்கினையுடையது,  என்றார்    -    என்றும் சொன்னார்கள்,
எ-று.                                                  (28)

919. கருடனை யிழிந்து கைமா மிசைவந்து புரோதன் காட்டக்
    குரவர்க ளுறையுங் கோடி சிலையினை வலம்வந் தேந்திப்
    பெரியவ னின்ற போழ்தின் வேந்தர்விஞ் சையர்கள் விண்ணோர்
    தருதிறை யோடும் வந்து தாழ்ந்தடி பரவி னாரே.

     (இ-ள்.) (அதன்  மேல்),  கருடனை  - கருட தேவனினின்றும்,
இழிந்து    -    இறங்கி,   கைமாமிசை - யானையின்மேல், வந்து -
(ஏறிக்கொண்டு)  வந்து, புரோதன் - புரோகிதன், காட்ட - காண்பிக்க,
குரவர்கள் - (ஸம்மியக்ஞானாதி குண