முள்ள) மஹிரமுனிவரர்கள், உறையும் - மிகுதியாகச் சேர்ந்து தங்குதல்
கொள்ளும், கோடி சிலையினை - கோடி சிலையென்னும் பர்வதத்தை,
வலம் வந்து - பிரதக்ஷிணமாக வந்து, ஏந்தி -அதனைத் தன்
கரங்களால் தூக்கி, பெரியவன் - பராக் கிராமத்தில் மிக்கோனாகிய
விபீஷணன், (நின்றான், அவ்வாறு) நின்ற போழ்தில் - நின்ற
காலத்தில், வேந்தர் - பூமியரசர்களும், விஞ்சையர்கள் -
வித்தியாதரவரசர்களும், விண்ணோர் - வியந்தர தேவாதிபதிகளும்,
தரும் - கொண்டு வந்து கொடுக்கும்படியான, திறையோடும் -
திறைப்பொருள்களோடும் பாகுட வஸ்துக்களோடும், வந்து -
இராமகேசவர்களிடத்தில் வந்து, அடி - பாதங்களில், தாழ்ந்து -
வணங்கி, பரவினார் - ஸ்துதித்தார்கள், எ-று. (29)
920. மலரென மலையை யேந்தி வைத்தவன் மன்னர் சூழ
வலர்கதி ராழி பின்போய்த் திசையடிப் படுத்து மீண்டு
நிலமக டிலகம் போலு மயோத்திமா புரத்து நீ
மலையொடு மதியம் போல மன்னவர் துன்னி னாரே.
(இ-ள்.) (பின்னர்), மலரென - புஷ்பத்தைப் போல, மலையை -
அந்தப் பர்வதத்தை, ஏந்தி - (மேற்கூறியபடி) தூக்கி, வைத்து -
மறுபடியும் வைத்து விட்டு, அவன் - அக்கேசவனாகிய விபீஷணன்,
(பல தேவனாகிய வீதபயனோடும்), கூட, மன்னர் - அனேக
தேசத்தரசர்கள், சூழ - சூழ்ந்துவர, அலர் கதிர் - பரந்த
கிரணத்தையுடைய,ஆழி - சக்ராயுதத்தின், பின்போய் - பின்னாகவேச்
சென்று, அதாவது : சக்கரத்தைச் செலுத்தி அது சென்று
ஒவ்வோரிடத்திலும் ஜெயத்தையுண்டாக்க அது சென்றவழியே பின்
சென்று) திசையடிப்படுத்து - திக்கு விஜயம் செய்ய (அதாவது :
எத்திக்கிலு முள்ளவர்களையும் தனதாளுகைக்குட் படும்படி செய்ய
அதன்மேல்), மண்டு - திரும்பி, நிலமகள் - பூமிதேவிக்கு,
திகலம்போலும் - நெற்றிப் பொட்டுக்குச் சமானமாகிய, அயோத்திமா
புரத்து - அயோத்தியா புரியில், நீல மலையோடு - நீல பர்வதத்தோடு,
(கூடிய) மதியம் போல - சந்திரனைப் போல, மன்னவர் -
அரசர்களாகிய பல தேவ வாஸுதேவரென்னும் விபீஷண வீதபயர்கள்,
துன்னினார் - அடைந்தார்கள், எ-று. (30)
921. மதியொடு கரிய மேகங் கண்டமாக் கடலைப் போலப்
பதியவர் காதல் பொங்கப் பார்த்திபர் புக்க போழ்தின்
விதியறி புலவர் சூழ்ந்து வெற்றிச்சீ யாச னத்து
மதியன்ன குடையி னீழல் வைத்துச்சா மரைகள் வீச.
(இ-ள்.) (அவ்வாறு) மதியொடு - பூர்ணச் சந்திரனோடு, கரிய -
கறுத்த, மேகம் - மேக மண்டலத்தையும், கண்ட - பார்த்த, மா -
பெரிதாகிய,கடலைப் போல - ஸமுத்திரமானது பெருகுவதுபோல, அப்
பதியவர் - அந்த அயோத்தியா புரியிலுள்ளவர்கள், (கண்டு) காதல் -
ஆசையினால், பொங்க - மிகுதியாக, பார்த்தி |