பர் - வீதபய விபீஷணரென்று மிரண்டரசர்களும், புக்கபோழ்தின் -
அடைந்த காலத்தில், விதியறி - பட்டாபிஷேக விதிகளைத்
தெரிந்திராநின்ற, புலவர் - புரோகிதர் முதலாகிய புலவர்கள், சூழ்ந்து -
சேர்ந்து, வெற்றி - வெற்றி பொருந்திய, சீயாசனத்து -
சிம்மாசனத்தின்மேல், மதியன்ன - சந்திரன்போன்ற, குடையின் -
குடையினுடைய, நீழல் - நிழலிலே, வைத்து - இவ்வரசர்களை
ஸ்தாபிக்க, சாமரை - வெண் கவரிகளை, வீச - இருபக்கங்களிலும்
(பணியாளர்) வீசவும், எ-று.
இதுவும் அடுத்த செய்யுளும் குளகம். வைக்க என்பது, வைத்து
எனத் திரிந்து வந்தது. (31)
922. பாற்கடற் பரவைத் தெண்ணீர்ப் பருதியின் படிய கும்ப
மாற்றவா யிரத்தோ ரெட்டி னமரரா லேந்தப் பட்ட
நூற்கடல் கேள்வி யார்க ணுனித்தமந் திரங்கள் சொல்லி
யேற்றவா றாட்டி னார்க லேத்தினார் பார்த்தி வேந்தர்.
(இ-ள்.) ஆற்ற - மிகுதியாக, (யோக்கியாம்சம் வாய்ந்த),
ஆயிரத்தோ ரெட்டின் - ஆயிரத்தெட்டாகிய, அமரரால் - கணபத்த
தேவர்களால், மருதியின் படிய - சூர்யனுக்குச் சமானமான ஒளியுள்ள,
கும்பம் - ரத்னகடங்களில், ஏந்தப் பட்ட - எடுத்துக்கொண்டு
வரப்பட்ட, பரவை - விசாலமான, பாற்கடல் -
க்ஷீரஸமுத்திரத்தினுடைய, தெண்ணீர் - தெளிந்த நீரால், நூல்கடல் -
சாஸ்திரமாகிற சமுத்திரத்தின், கேள்வியார்கள் - கேள்வியையுடைய
புரோகிதர்கள், நுனித்த - சூக்ஷமமாக ஆராய்ந்தறிந்த, மந்திரங்கள் -
சக்தி வாய்ந்த மந்திர பதங்களை, சொல்லி - கோஷசுத்தி பூர்வமாகச்
சொல்லி, ஏற்றவாறு - இசையும்படியான விதமாக, ஆட்டினார்கள் -
(அவ்வரசர்கட்கு) அபிஷேகஞ் செய்தார்கள், (அப்போது),
பார்த்திவேந்தர் - இப்பூமியரசர்களெல்லாம், ஏத்தினார் - (அவர்களை)
ஸ்தோத்திரம் பண்ணினார்கள், எ-று. (32)
923. முடியதன் பின்னணிந்தார் முரசங்கண் முழங்க மும்மைப்
படிமிசை யரச ரீரெண் ணாயிரர் பணிய விஞ்சைத்
தடவரை யரச ரைம்பத் தஞ்சினுக் கிரட்டி தாழப்
படரொளி பரப்ப வெண்ணா யிரவர்விண் ணோர்ப ணிந்தார்.
(இ-ள்.) அதன் பின் - க்ஷீரவாருதியினுடைய க்ஷீரஜலாபிஷேக
பூர்வகம் செய்ய வேண்டிய கிரியைகளெல்லாம் எழினி மறைப்பிற்
செய்த பிறகு, முரசங்கள் - அஷ்டாதச வாத்தியங்கள், முழங்க -
சப்திக்க, முடி - பட்டாபிஷேக யோக்கியத் திருமுடியை, (பெரியோர்),
அணிந்தார் - (அவர்க்கு) யாவருமறியச் சூட்டினார்கள். (அப்போது),
மும்மைப்படிமிசை - அந்நாட்டுத் திரிகண்டத்திலுமுள்ள,
ஈரெண்ணாயிர அரசர் - பதினாறாயிரவர்களாகிய ராஜாக்கள்,
(வரிசைக்கிர |