பக்கம் எண் :


 பலதேவன் சுவர்க்கம்புக்க சருக்கம் 435


 

நின்ற,   மாதேவியர்   -   மஹாதேவியர்கள், எண்ணாயிரத்திரட்டி -
பதினாறாயிரம்    பெயர்களாவர், வேழமேல்  - யானைகளின் மேலே,
திறைகொண்டு   - பகுதிப்   பணங்கொண்டு  வந்து, (கட்டும்படியாக),
எய்தும் - அடைகின்ற, நாடும் - தேசங்களும், மேல் - முன் தேவிமார்
கணக்கில்,    உரைத்ததாம்   -   சொல்லப்பட்ட    சங்கியையாகிய
பதினாறாயிரமாகும், எ-று.                                 (35)

926. மாலைதண் டமோகம் வாளி கலப்பையும் பலன வாகும்
    நாலுநல் லியக்கர் நாலா யிரவர்காப் பியற்றிச் செல்வ
    ரேலவார் குழலின் மாதே வியருமெண் ணாயி ரவர்
    மேலுலாம் மதியம் போலும் மேனியான் விரும்பப் பட்டார்.

     (இ-ள்.)   மாலை  - மணிமாலையும், தண்டு - தண்டாயுதமும்,
அமோகம் - சக்தி குறைதலில்லாத, வாளி - பாணமும், கலப்பையும் -
ஹலாயுதமும்,   பலனவாகும்    - பல தேவனுடையனவாகும், நாலு -
இந்நாலு    இரத்தினங்களையும்,  நல் - நன்மையாகிய, நாலாயிரவர் -
நாலாயிரம் பெயர்களாகிய, இயக்கர் - யக்ஷதேவர்கள், காப்பு - காவல்,
இயற்றி    -   செய்து,   செல்வர் - செல்வார்கள், (மேலும்), மேல் -
ஆகாயத்தில்,   உலாம்    -      உலவுகின்ற,    மதியம்போலும் -
சந்திரன்போலும்,    மேனியான்  - வெண்ணிறமான சரீரமுடைய அப்
பலதேவனாலே,  விரும்பப்பட்டார் - இச்சிக்கப்பட்டவர்களாகிய, ஏலம்
- மயிர்ச்சாந்தணிந்த,  வார்   - நீண்ட, குழலின் - அளகத்தையுடைய,
மாதேவியரும்    -    பெருமை  பொருந்திய பட்டத்துத் தேவியரும்,
எண்ணாயிரவர் - எண்ணாயிரம் பெயர்களாவர், எ-று.           (36)

927. கந்திலை நாட்டுக் கண்ட மூன்றினிற் காமர் செல்வத்
    திந்துவா ணுதலி னாரோ டின்பநீர்க் கடலை யாடி
    யந்தரத் திறைவன் போல வண்டுகள் பலவுஞ் சென்றார்
    வெந்திறற் களிற்று வேந்தன் விபீடணனன் வியோக மானான்.

     (இ-ள்.)   கந்திலை    நாட்டு  - கந்திலா தேசத்திலே, கண்ட
மூன்றினில்    - திரிகண்டத்திலேயாகிய, காமர் செல்வத்து - அழகிய
அர்த்த  சக்ரவர்த்தி ஸம்பத்தில், (சேர்ந்தவர்களாகி), இந்து - சந்திரன்
போல,    வாள்   -  ஒளிபெற்ற,  நுதலினாரோடு -நெற்றியையுடைய
தேவிமார்களோடு,   இன்ப நீர்கடலை - சௌக்கியமாகிற நீர் நிறைந்த
சமுத்திரத்தில்,    ஆடி   -    மூழ்கி, (அவ்வின்பத்தை யனுபவித்து),
அந்தரத்திறைவன் போல - விண்ணுலகத்தரசனாகிய தேவேந்திரனைப்
போல, (சுகமுற்று), ஆண்டுகள் பலவும் - பல வருஷங்கள் வரையிலும்,
சென்றார்     -    (இவ்விருவரும்)   சென்றார்கள்,  (பிறகு), வெம் -
வெவ்விதாகிய,    திறல் - வலிமையுள்ள களிற்று - யானையையுடைய,
வேந்தன்     -   அரசனென்னும்    வாஸுதேவனாகிய விபிஷணன்,
வியோகமானான் - தேகவியோகமடைந்தான், எ-று.

     கடலை - உருபு மயக்கம்.                            (37)