நரகபரியாய துக்கத்தை யடைந்தேனேயென்று) வருத்தமடைய
வேண்டாம், மாற்றுதற்கரிய - நீக்குதற்கரிய, துன்பம் - நீ
யடைந்திருக்கிற இவ்விரண்டாநரக துன்பம், பெரிதென்று - மிகவும்
பெரியதென்று, மயங்கவேண்டாம் - நீ பிரமிக்க வேண்டாம், கீழ் கீழ்
நரகத்து - இதற்குக் கீழே கீழேயுள்ள நரகங்களின், அவ்வியல்பு -
அந்த ஸ்வபாவத்தை, அறிந்தால் - தெரிந்து கொண்டால், ஆற்றுதற்கு
- இவ்விரண்டாநரக துன்பம் சகித்தற்கு, எளிது - எளிதாகும்,
(அவற்றின் விவரங்களைக் கூறுகின்றேன் கேள்), எ-று. (6)
936. ஏழுள நரக நாம மிரதனஞ் சக்க வாலு
வாழிய பங்கந் தூமந் தமந்தமத் தமத்த மாகும்
பாழியிந் தகங்கள் சேணி பகிணகந் தொகுப்ப வந்த
வேழினும் புகவெண் பத்து நான்குலக் கங்க ளாமே.
(இ-ள்.) ஏழுள - ஏழாயிரா நின்ற, நரகம் - நரகங்களினுடைய,
நாமம் - பெயர்கள், இரதனம் - ரத்னப்பிரபையும், சக்கம் - சர்க்கராப்
பிரபையும், வாலு - வாலுகாப்பிரபையும், ஆழிய - பெரிதாகிய, பங்கம்
- பங்கப் பிரபையும், தூமம் - தூமப் பிரபையும், தமம் - தமப்
பிரபையும், தமத்தமத்தமாகும் - தமஸ்தமப் பிரபையுமாகும், பாழி -
பலம் பொருந்திய, இந்தகங்கள் - இந்திரகங்களும், சேணி -
பேஸ்ரீணிபந்தங்களும், பகிணகம் - புஷ்ப பிரகீர்ணங்களும், தொகுப்ப -
சேர்க்க, வந்த - வரப்பட்ட ஸங்கியைகளானவை, ஏழினும் -
ஏழுநரகங்களிலும், புக - சேர, எண்பத்து நான்கு லக்கங்களாம் -
எண்பத்து நாலு லட்சம் ஆவாஸங்களாகும், எ-று. (7)
937. ஒன்றுமூன் றைந்து மேழு மொன்பதும் பத்தோ டொன்று
நின்றமூன் றோடு பத்து நிரையத்துப் புரைகள் மேன்மே
லொன்றுமூன் றேழு பத்து மொருபத்தே ழிருபத் தீரி
னின்றமூன் றோடு முப்பா னாழிகீழ் புரைதோ றாயு.
(இ-ள்.) நிரையத்து - நரகங்களில், புரைகள் - புரைகளானவை,
ஒன்று - (ஏழா நரகத்தில்) ஒரு புரையும், மூன்று - (ஆறாநரகத்தில்)
மூன்று புரையும், ஐந்து - (ஐந்தா நரகத்தில்)ஐந்து புரையும், ஏழும் -
(நாலாநரகத்தில்) ஏழுபுரையும், ஒன்பதும் - (மூன்றா நரகத்தில்) ஒன்பது
புரையும் பத்தோடொன்று - (இரண்டா நரகத்தில்) பதினோரு புரையும்,
மூன்றோடு பத்து - (முதல் நரகத்தில்) பதின்மூன்று புரையும்,
மேன்மேல் - ஒன்றுக்கொன்று மேலே மேலே, நின்ற - இராநின்றன,
கீழ்ப்புரைதோறும் - கீழ் கீழ்ப் புரைகள்தோறும், ஆயு -
நாரகர்களுடைய உத்கிருஷ்டாயுஷ்யமானது, ஆழி - கடல்கள், ஒன்று
- (முதல் நரகத்தில் கீழ்புரையில் அதாவது : பதின்மூன்றாம்
புரையிலிராநின்ற நாரகர்களுக்கு) ஒரு கடலும், மூன்று - (இரண்டா
நரகத்துக் கீழ்ப்புரை நாரகர்களுக்கு) மூன்று |