பக்கம் எண் :


 நிரையத்துளறவுரைச்சருக்கம் 439


 

(பின்னர்  நீ), இறந்து - மரணமடைந்து, இவ்வேதனை - இப்படிப்பட்ட
துன்பத்தையுடைய,    நரகத்து    -     நரகத்தில்,    ஆழ்ந்தாய் -
கர்மோதயத்தால்   விழுந்து      நரகனானாய், யான் - நான், விழு -
பெரிதாகிய,  தவத்தில் - தபத்தினாலே, லாந்தம் - லாந்தவ கல்பத்தை,
புக்கேன்     -   அடைந்தேன், (அவ்வாறடைந்து),      ஒதியால் -
எனக்குண்டாகிய  அவதிஜ்ஞானத்தால், உன்னை - உன்னை, கண்டு -
தெரிந்து, இங்கு  - இவ்விடத்தில், உறுதி - உனக்குறுதியாகும்படியான
தர்மங்களை,    உரைக்க    -   சொல்லும்படி,   வந்தேன் - உனது
சமீபமடைந்தேன், எ-று.

     இதுவும், அடுத்த செய்யுளும் குளகம்.                    (4)

934. என்றலு மிறந்த மேலைப் பிறவிக ளறிந்திட் டென்னை
    வந்துடன் வணங்கி வீழ்ந்து மயங்கினா னவனைத் தேற்றி
    இந்திர விபவ மேனு நின்றதொன் றியார்க்கு மில்லை
    வெந்துயர் நரகின் வீழா வுயிர்களு மில்லை யென்றேன்.

     (இ-ள்.)     என்றலும் - என்று யான் சொல்லவும், மேலை -
முன்னாளில்,    இறந்த   - (உண்டாகி)    நீங்கப்பட்ட, பிறவிகள் -
பிறப்புக்களை, உணர்ந்திட்டு - (அவன்) பவஸ் மிருதியாலறிந்து, உடன்
- உடனே,     வந்து - என் சமீபத்தில் வந்து, என்னை - என்றனை,
வணங்கி    - வணங்கினவனாகி, வீழ்ந்து - எனக்கு முன்னே வீழ்ந்து,
மயங்கினான்    -  மயக்கமடைந்தான், (அப்போது நான்), அவனை -
அந்நாரகனை,   தேற்றி    - தெளியும்படி செய்து, (அவனை நோக்கி,
நாரகனே!)   இந்திர   விபவமேனும் - தேவேந்திர வைபவமானாலும்,
நின்றதொன்று - சாசுவதமாக நிற்கப்பட்ட அனுபவமொன்று, யார்க்கும்
- எவர்களுக்கும், இல்லை - இச் சம்ஸாரத்திலில்லை, வெம் - வெப்பம்
பொருந்திய,  துயர்  துக்கத்தையுடைய, நரகின் - நரகத்திலே, வீழா -
அடையாத்,   உயிர்களும் - ஜீவன்களும், இல்லை - இச்சம்ஸாரத்தில்
கிடையாது, என்றேன் - என்று சொன்னேன், எ-று.             (5)

935. மாற்றிடைச் சுழன்று வாழு முயிர்கட்கு வந்து செல்வந்
    தோற்றின தொடரன் மாய்த லியல்புநீ கவல வேண்டா
    மாற்றுதற் கரிய துன்பம் பெரிதென்று மயங்க வேண்டா
    மாற்றுதற் கெளிது கீழ்கீழ் நரகத்தவ் வியல்ப றிந்தால்

     (இ-ள்.) (அவ்வாறு      சொல்லி மேலும்), மாற்றிடை - (நரக,
திரியக்    மானுஷ  தேவரென்னும் சதுர்கதி) சம்ஸாரத்தில், சுழன்று -
பரிப்பிரமித்துச்    சுழன்று,    வாழும்   - வாழுகின்ற, உயிர்கட்கு -
ஜீவன்களுக்கு, செல்வம் - ஐஸ்வரியமானது, வந்து - வந்து, தோற்றின
- உண்டானதாகி,   தொடரல் - சேர்ந்திருப்பதும், மாய்தல் - மாய்ந்து
விடுவதும் (அதாவது :   நீங்கி விடுவதும்), இயல்பு - இச்சம்ஸாரத்தின்
இயற்கையாகும்,    (ஆதலின்), நீ - நீ, கவலவேண்டாம் - (முன் மனு
தேவ,    பரியாயத்திலிருந்தேனே     இப்போது அப்பரியாய ஸம்பத்
சுகங்களைவிட்டு