பக்கம் எண் :


438மேருமந்தர புராணம்  


 

தங்களனுஷ்டித்து,    (அதன்    பலனாக),   மாசுக்கம்  - மஹாசுக்ர
கல்பமென்னும்   தேவலோகத்தில், புக்கு - அடைய, (பின்னர் அங்கு
நின்றும்    ஆயுரவஸான    காலத்தில்   நான்), விஞ்சைப்பதியில் -
வித்தியாதரருலகத்தில்,   சீதரையானேன்    -  சீதரையென்னும் ராஜ
ஸ்த்ரீயாக   ஜெனித்தேன், (அப்போது  நீ), என்   மகள் - எனக்குப்
புத்ரியாகிய,    இசோதரையுமானாய்    -  யசோதரை     யென்னும்
பெயருடையவளும் ஆனாய், எ-று.

     ‘புக" என்பது, ‘புக்கு" எனத்திரிந்து வந்தது.                (2)

932. கந்தியாய் நோற்றென் னோடுங் காவிட்ட கற்பம் புக்கு
    வந்தியா னிரத மாலை மண்ணின்மே லாக நீயு
    மந்தரத் திழிந்தென் மைந்த னரதனா யுதனு மாகிச்
    சிந்தைமா தவத்தோ டொன்றி யச்சுதஞ் சென்று மீண்டோம்.

     (இ-ள்.) (அதன் மேல்   நீ), கந்தியாய் - ஆர்யாங்கனையாகி,
நோற்று     - நோன்புகள் நோற்று, என்னோடும் - என்னுடன் கூட,
காவிட்ட கற்பம் - காபிஷ்டகல் பத்தில், புக்கு - சேர்ந்து தேவனாய்த்
தோன்ற, (பின்னர்), யான்    - நான், வந்து - அக் கல்பத்தினின்றும்
ஆயுஷ்    யாவஸானத்து வந்து, மண்ணின் மேல் - பூமியின் மேலே,
இரத  மாலையாக - இரத்ன மாலையென்னும் ராஜ ஸ்த்ரீயாக, நீயும் -
நீயும்,    அந்தரத்து - அத்தேவருலகத்தினின்றும், இழிந்து - ஆயுஷ்
யாவஸானத்து    நழுவி,      என்மைந்தன்   -   என் புத்திரனான,
இரதனாயுதனும்   ஆகி    -    இரத்தினா   யுதனென்னும் பெயரை
யுடையவனுமாக,   (அதன்   மேல்     நாமிருவரும்), சிந்தை - தரு
மத்தியானத்தோடும்,  தவத்தோ   டொன்றி   - தபஸோடுஞ் சேர்ந்து,
(அப்புண்ணிய கர்ம பலத்தால்), அச்சுதஞ் சென்று - அச்சுதமென்னும்
தேவலோகத்தையடைந்து    தேவர்களாகித்   தேவசுக  மனுபவித்து,
மீண்டோம்   -   ஆயுரவஸான   காலத்து    அக்கல்பத்தினின்றும்
திரும்பினோம், எ-று.

     புக, ஆக  வென்னும் செயவெனெச்சங்கள், புக்கு, ஆகி எனச்
செய்தெனெச் சங்களாகத் திரிந்து வந்தன.                    (3)

933. தாதகி தீவிற் கீழைக் கந்திலை யயோத்தி யின்க
    ணேதமி லிராம னானீ கேசவ னாயி றந்திவ்
    வேதனை நரகத் தாழ்ந்தாய் விழுத்தவத் திலாந்தம் புக்கே
    னோதியா னுன்னைக் கணடிங் குறுதியா னுரைக்க வந்தேன்.

     (இ-ள்.)      (அவ்வாறு     திரும்பி),      தாதகிதீவில் -
தாதகிஷண்டத்வீபத்தில்,   கீழை - பூர்வபாக விதேக க்ஷேத்திரத்தில்,
கந்திலை     -     கந்திலா     நாட்டில்,  அயோத்தியின் கண் -
அயோத்தியாபுரத்தில்,    ஏதமில்   - குற்றமில்லாத, இராமன் - பல
தேவன், நான் - யானாகவும், நீ - நீ, கேசவன் - வாஸுதேவனாகவும்,
ஆய் - ஆக,