பக்கம் எண் :


444மேருமந்தர புராணம்  


 

    சினையில் லெனகாய்ந் தவிரும் பினைநீ
    ரணையும் படியா லணையா வடுமே.

     (இ-ள்.)   கணமும்  - (அந்நாரகர்களுக்கு)   ஒரு  நிமிஷமும்,
இடையின்றி   -    இடை விடாமல், எழும் - உண்டாகிய, பசியால் -
பசியினால்,  உணவென்றென - அன்னம் எப்பொழுதுகிடைக்குமென்று
நினைத்த  வளவில், உலகத்துள - அந்நரக லோகத்திலுள்ள, நஞ்சு -
விஷ   ஸ்கந்தங்களெல்லாம்,   வந்து    -  அவர்களிடத்தில் வந்து,
இணையில்லென - இதற்கு நிகரில்லை யென்று சொல்லும்படி, காய்ந்த
-   கருமான்   உலையில் வெந்த, இரும்பினை - இரும்பினை, நீர் -
ஜலமானது,   அணையும்   படியால் - சேர்ந்து ஏகமயமாவது போல்,
அணையா   - சரீரத்திற் செறிந்து, அடும் - துன்பஞ் செய்யா நிற்கும்,
எ-று.                                                  (15)

வேறு.

945. மேருநே ரிருப்பு வட்டை யிட்டவக் கணத்தி னுள்ளே
    நீரென வுருக்குஞ் சீத வெப்பங்க ணின்ற கீழ்மே
    லார்வமி லறிவன் றந்த நூலினைந் தாவ தன்னிற்
    கார்முகில் வண்ண சீத வெப்பங்க ணின்ற கண்டாய்.

     (இ-ள்.) கார்முகில்  வண்ண - கரிய மேகம்போன்ற நிறமுடைய
நாரகனே!,     மேருநேர்  - மஹாமேரு பர்வதத்திற்குச் சமானமாகிய,
இருப்பு   வட்டை   -   இரும்புக்குண்டை, இட்டவக்கணத்தினுள்ளே
அந்நரக   பூமியில்  இட்டஸமயத்திலே, நீரென - அது ஜலமாகும்படி,
உருக்கும் - உருக்கும்படியான, சீதம் - சீதாவாஸங்களும், வெப்பங்கள்
- உஷ்ணாவாஸங்களும்,   கீழ்மேல் - கீழ் மேலாக (அதாவது : கீழில்
சீதாவஸங்களும்   மேல்  நரகங்களில் உஷ்ணாவாஸங்களும்), நின்ற -
நிலைபெற்றிருக்கின்றன,   ஆர்வமில்  - ராகமில்லாத (வீதராகனாகிய),
அறிவன் - கேவல ஞானத்தையுடைய ஸர்வஜ்ஞன், தந்த - தெரிவித்த,
நூலின்  - பரமாகமத்திலே,   (கூறியபடி)   ஐந்தாவதன்னில் - ஐந்தா
நரத்திலே,   சீதவெப்பங்கள்   -  சீதாவாஸங்கள் உஷ்ணாவாஸங்கள்
இரண்டும், நின்ற - நிலைபெற்றிருக்கின்றன, எ-று.

     ஐந்தாநரகத்திலே  மேலே  மூன்று   புரையிலும் அதற்கு மேல்,
நாலு,  மூன்று,  இரண்டு, ஒன்றுமாகிய நரகங்களில் உஷ்ணாவாஸமும்,
அந்த    ஐந்தாவது  நரகத்திலே   கீழ்   இரண்டு புரையிலும், ஆறா
நரகத்திலும், ஏழாவது நரகத்திலும் சீதாவாஸங்களுமாகும்.

     கண்டாய் - அசை.                                  (16)

946. வேண்டிய வதற்கு மாறா விகுவணை யெட்டு மெய்யின்
    மாண்பில தோன்று நம்மை மாறுமுன் செய்ய வந்தங்