பக்கம் எண் :


 நிரையத்துளறவுரைச்சருக்கம் 445


 

    கீண்டிய பாவத் தாலேழ் நரகத்து மிரட்டிக் கீழ்க்கீழ்
    மூண்டதீ மறுகித் தீமை முறுகுந்தீ வினைகளாலே.

     (இ-ள்.)   வேண்டியவதற்கு    -    நாரகர்கள்    தங்களால்
இச்சிக்கப்பட்ட   விஷயத்திற்கு, மாறா -    மாறுபாடாய், விகுவணை
யெட்டு        - எட்டுப்பிரகாரமான   விகுர்வணைகள்,  மெய்யில் -
அவர்களுடைய    சரீரத்தில்,  மாண்பில  - மாட்சிமையில்லாதனவாக,
தோன்றும்  - ஏற்படும், நம்மை - ஆத்மனாகிய நம்மை, முன் - முன்
சன்மத்தில், மாறு செய்ய - மாறுபாடாக மறைவைச் செய்ய (அதாவது :
மாய்கையைச் செய்ய), வந்து - (அப்படிப்பட்ட மோஹனீயராகத்வேஷ
பரிணத   பாவ  பாபகர் மத்தினால் ஆத்மனிடத்தில்) வந்து, அங்கு -
அவ்வாத்ம   பிரதேச    பரிஸ்பந்தமாகிய  அவ்விடத்தில், ஈண்டிய -
சேர்ந்திராநின்ற,    பாவத்தால்   -  திரவிய  பாபகர்மத்தினால், ஏழ்
நரகத்தும்  - இவ்வேழு நரகங்களுள்ளும், கீழ் கீழ் - ஒன்றுக்கொன்று
கீழே   கீழே   யிருக்கப்பட்ட நரகங்களில், இரட்டி - இரட்டித்ததாகி,
மூண்ட   -    மூளப்பட்ட, தீ  - அக்கினியினாலே, மறுகி - வருந்த,
தீவினைகளாலே   - துஷ்கர் மோதயத்தால் ஆகிய துன்பங்களினால்,
தீமை - கொடுமையானது, முறுகும் - அதிகரிக்கும், எ-று.       (17)

947. இயல்பினாந் துன்ப மென்று மேழ்நர கத்து நீங்கா
    மயரிகள் செய்வ வெல்லாம் வந்துவந் துற்று நீங்கும்
    புயலுறு தடக்கை வேந்தே புலசுதேன் கள்ளை யுண்டா
    ருயலுறா வகையிற் செம்பை யுருக்கிவாய் பெய்கின் றாரே

     (இ-ள்.)   புயலுறு    தடக்கை  வேந்தே - மேகத்தை நிகர்த்த
(அதாவது :   மேகம்     போல     கொடுக்கும்)   கையை   முன்
சன்மத்திலுடைத்தாகிய     விபீஷண    னென்னும்     அரசனாகிய
நாரகனே!,    ஏழ்    நரகத்தும் - ஏழு நரகங்களிலும், இயல்பினாம் -
ஸ்வபாவத்தினாலாகிய,   துன்பம்  - (எழுந்து   விழுதலாகிய) துக்கம்,
என்றும்   -    எப்பொழுதும் (அதாவது :  ஆயுஷ்ய    பரியந்தம்),
நீங்கா    -    நீங்காத,  மயரிகள்  - அஜ்ஞானிகளாகிய நாரகர்கள்,
செய்வவெல்லாம்    -     ஒருவருக்கொருவர்         கலஹமிட்டுச்
செய்கின்ற     துக்கங்களெல்லாம்,   வந்துவந்துற்று   - வந்தடைந்து
வந்தடைந்து,    நீங்கும்   -   நீங்கி    நீங்கியுண்டாகும், புலசுதேன்
கள்ளையுண்டார்   - (பூர்வசென்மத்தில்,)   மாமிசம்   மது கள்ளாகிய
இவைகளை   உண்டவர்களை, (இந்நரகங்களில்),    உயலுறாவகையில்
- பிழைக்க   முடியாத   வகையால், (புராதன   நாரகர்கள்), செம்பை
- செம்பை,   உருக்கி   - ஜலமாக    உருக்கி,    வாய்   - நூதன
நாரகனுடைய   வாயில்,     பெய்கின்றார்    -      கொடிறுகளால்
ஊற்றுகின்றார்கள், எ-று.                                   (18)

948. அறமறி வடக்க மாண்மை குடிப்பிறப் பழிய வன்பிற்
     பிறர்மனை நலத்திற் சேர்ந்தார் பேரழற் குட்டந் தன்னின்