னுடைய கையிலும், நஞ்சில் - விஷ ஸமூகத்திலும், சூழெரியகத்தில் -
சூழ்ந்து எரிகின்ற அக்னியினது மத்தியிலும், போரில் -
யுத்தரங்கத்திலும், சுறா - மகர மத்ஸயங்களால், எறி - எறிகின்ற,
கடலில் - ஸமுத்திரத்திலும், கானில் - காட்டிலும், (ஆகிய
இவ்விடங்களிலெல்லாம்), நீள் பெரிதாகிய, அரணாகி - ஆத்மனுக்குச்
சகாயமாகி, நிற்கும் - நீங்காமல் நிற்கின்றதும், நிரையத்து -
நரகங்களிலே, விழாமல் - விழவொட்டாமல், காக்கும் - காத்து
ரக்ஷிக்கும்படியானதுமாகிய, அறத்தைப்போலும் - தர்மத்தைப்போல,
கிடைப்பது - சேரப்பட்டதாகி ரக்ஷிக்கின்ற பொருள், ஒன்று -
வேறொன்றும், இல்லை - இவ்வுலகத்திலில்லை, (ஆகையால் நாரகனே!)
இனி - இனிமேல், (அந்த தர்ம ஸ்வரூபத்தை), கேள் - உறுதியாகக்
கேட்கக்கடவாய், எ-று.
கண்டாய் - அசை. (38)
968. உம்பர்தம் முலகி னுய்க்கு முலகினுக் கிறைமை யாக்கும்
வெம்பிய பிறப்பின் வாங்கி வீட்டின்கண் வைக்கு மெய்யே
நம்பிநல் லறத்தைப் போலுந் துணையில்லை நமக்கு நாடின்
கம்பமி னிலைமை யாகித் திருவறங் கைக்கொ ளென்றேன்.
(இ-ள்.) (மேற்கூறிய அறமானது), உம்பர்தம் - தேவர்களுடைய,
உலகில் - உலகமாகிய ஊர்த்துவ லோகத்தில், உய்க்கும் -
அடைவித்துப் புண்ணிய பலன்களைக் கொடுக்கும் -
(அதுவல்லாமலும்), உலகினுக்கு - இம்மூன்று லோகத்துக்கும்,
இறைமைய க்கும் - ஆதிபத்தியமாகுந் தன்மையான அரஹந்த
பதவியையும் செய்விக்கும், வெம்பிய - வெதும்பும்படியான, பிறப்பின் -
இச்சம்ஸாரத்தில் பிறக்குந் தன்மையினின்றும், வாங்கி - விலக்கி,
வீட்டின்கண் - மோட்சத்திலே, மெய் - யாதாத்மியமாக (அதாவது :
துருவமாக), வைக்கும் - ஸ்தாபிக்கும், நம்பி - தம்பியே !. நாடின் -
ஆராயுமிடத்தில், நமக்கு - ஆத்மனாகிய நமக்கு, நல் - நன்மையாகிய,
அறத்தைப்போலும் - தர்மத்தைப்போல, துணை - ரக்ஷணையாகும்
பொருள், இல்லை - வேறொன்றில்லை, (ஆகையால்), கம்பமில் -
சலனமில்லாத, கொள் - சேர்வாயாக, என்றேன் - என்று
ஆதித்யாபதேவனாகிய யான் சொன்னேன், எ-று. (39)
969. என்றலு மிறப்ப வென்க ணலத்துவிந் நிலத்து வந்தின்
றொன்றலா வுறுதி சொன்னீ ரும்மொழி வழிநில் லேனே
னின்றன னென்று மிந்த நிரையத்து நீங்க லின்றி
யென்றவ னிறைஞ்ச நன்றென் றியானென துலகம் புக்கேன்.
(இ-ள்.) என்றலும் - என்று யான் சொல்லவும், இறப்ப -
மிகவும், என் கண் - என்னிடத்தில், நலத்து - நன்மையாகித்
தங்களுக்குண்டாகிய ஆசையி |