பக்கம் எண் :


456மேருமந்தர புராணம்  


 

னாலே  இந்நிலத்து  - இந்த  நரக பூமியில், வந்து - சேர்ந்து, இன்று
இப்பொழுது,   ஒன்றலா  -   அனேகமாகிய, உறுதி -   உறுதியாகிய
தர்மத்தை,   சொன்னீர் - சொல்லினீர்கள், (நான்), உய்மொழி - உமது
வசனத்தினுடைய,  வழி - வழியில்,     நில்லேனேல் - அடையாமல்
போவேனேயாகில்,   என்றும்    - எப்பொழுதும், இந்த நிரையத்து -
இப்படிப்பட்ட நரகங்களில், நீங்கலின்றி - நீங்குதலில்லாமல், நின்றனன்
- அடைந்தவனாவேன், என்று - என்று சொல்லி, அவன் இறைஞ்ச -
அவன்   என்னை    வணங்க,  நன்றென்று- உனக்கு நன்மையாகக்
கடவதென்று, (ஆசீர்வதித்து),    யான் - நான், எனது - என்னுடைய,
உலகம்  - உலகமாகிய லாந்தவ கல்பத்தை, புக்கேன் - அடைந்தேன்,
எ-று.                                                 (40)

பத்தாவது :

நிரையத்துளறவுரைச்சருக்கம் முற்றுப்பெற்றது.