புகழலாற்றா - வர்ணிக்கமுடியாத, பம்மனற்கற்பம் - நன்மையாகிய
பிரம்ம கல்பத்தை, புக்கான் - அடைந்தான், எ-று. (6)
976. தன்னுள்ளே நின்று தன்னைத் தானர கத்து ளுய்க்குந்
தன்னுள்ளே நின்று தன்னைத் தான்றுறக் கத்து வைக்குந்
தன்னுள்ளே நின்று தன்னைத் தான்றடு மாற்று ளுய்க்குந்
தன்னுள்ளே நின்று தன்னைத் தான்சித்தி யகத்து வைக்கும்.
(இ-ள்.) தன்னுள்ளே - (ஆத்மத்திரவிய குணமாகிய சேதனா
குணமானது) தனக்குள்ளே, நின்று - அசுத்த நிச்சயத்தால்
அசுபோபயோகத்தில் பரிணமித்து நின்று, (அதனால்), தன்னை - அந்த
ஆத்மன் தன்னை, தான் - அப்பரிணாமமானது, நரகத்துள -
(அனுபசரிதாஸத்பூத வியவஹார கர்ம புத்கல பந்தங்களினால்)
நரகங்களிலே, உய்க்கும் - செலுத்தி வெதிரேக பரியாயத்தையடையும்,
தன்னுள்ளே - (அப்படிப்பட்ட ஆத்மத் திரவியம் முன் சொன்ன
அசுத்த நிச்சயத்தால்), தனக்குள்ளே, நின்று - சுபோபயோகத்தில்
பரிணமித்து நின்று, (அதனால்),தன்னை - அவ்வாத்மனாகிய தன்னை,
தான் - அப்பரிணாமமானது தான், துறக்கத்து - (அனுபசரிதாஸத்பூத
வியவஹாரத்தால்) தேவலோகத்தில், வைக்கும் - ஸ்தாபித்து
அப்பரியாயத்தைப் பண்ணும், தன்னுள்ளே - (ஆத்மன் தனது
குணமான ஞானாதி சேதனையினால்) தனக்குள்ளே, நின்று - (அசுத்த
நிச்சயத்தில் சுபாசுபோபயோகத்தில்) பரிணமித்து, தன்னை - அப்படிப்
பரிணமித்த ஆத்மனாகிய தன்னை, தான் - அப்பரிணாமாதி
விபாவகுணந்தான், தடுமாற்றுள் - (அனுபசரிதாஸத்பூத
வியவஹாரத்தால் சதுர்கதி) சம்ஸாரத்தில், உய்க்கும் - கர்ம பந்தத்தால்
செலுத்தி நாரக தரியக் நர தேவரென்னும் பரியாயத்தைப் பண்ணும்,
தன்னுள்ளே நின்று - (சுத்த நிச்சயத்தினால் சுத்தோபயோகத்தில்
பரிணமித்து) நின்று, தன்னை - அப்படி பரிணமித்த அவ்வாத்மனாகிய
தன்னை, தான் - அப்பரிணாமமானது தான், சித்தியகத்து -
(ஸ்வாத்மோத்த ஸித்தியென்னும் அனுபசரிதாஸத்பூத
வியவஹாரத்தினால்) பந்தவிமுக்த சுத்த நிச்சய நிஜஸ்வரூபத்துள்,
வைக்கும் - ஸ்தாபித்து ஸ்வபரியாயத்தைப் பண்ணும், எ-று. (7)
977. என்னுமிம் மொழிக்கி லக்காய் வந்தன மிதனைக் கண்ட
பின்னுநல் லறத்தைத் தேறார் பேதைமை யாதி யார்கள்
பன்னகர்க் கிறைவ பஞ்சா ணுத்தரம் புக்க பைந்தார்
மன்னன்வச் சிராயு தன்காண் வந்துசஞ் சயந்த னானான்.
(இ-ள்.) என்னும் - என்று சொல்கின்ற, இம்மொழிக்கு - இந்த
(வீதராக ஸ்ர்வஞ்ஞோக்தமாகிய) ஆகம வசனத்தினுக்கு, இலக்காய் -
சாட்சியாக, (அதா |