வது : எடுத்துச் சொல்ல உதாரணமாக நாம்,) வந்தனம் - தோன்றி
வந்தோம், இதனை - இந்த விதத்தை, கண்ட பின்னும் - கேட்டுத்
தெரிந்த பிறகும், நல் - நன்மையாகிய, அறத்தை - ஸ்ரீஜின
தர்மத்தினது ஸ்வரூபத்தை, தேறார் - தெளியாதவர்கள், பேதைமை -
அஞ்ஞானத்துக்கு, ஆதியார்கள் - முதல்வர்களாகிய பிரபல
தரமஹாமோஹனீய கர்ம உதய வசத்தர்களாவார்கள், பன்னகர்க்கு -
பவண தேவர்களுக்கு, இறைவ - எஜமானனாகிய தரணேந்திரனே!,
பஞ்சாணுத்தாம் - பஞ்சாணுத்தரமென்னும் அஹமிந்திரு லோகத்தில்
சர்வார்த்திஸித்தி விமானத்தில், புக்க - அடைந்த, பைந்தார் - பசுமை
பொருந்திய மாலையை யணிந்திராநின்ற, மன்னன் - ஸிம்மஸேன
வரசன், (கடைசியில்), வச்சிராயுதன் - வஜ்ஜிராயுதனாகி,
(தபோபலத்தால் சர்வார்த்தஸித்தி தேவனாய்), வந்து - இவ்விடத்து
விதேக க்ஷேத்திர கந்தமாலினி நாட்டு வீத சோகபுரத்தில் வந்து,
சஞ்சயந்தனானான் - ஸஞ்சயந்தனென்னும் அரசகுமாரனாகி ஜினதீக்ஷா
பிராப்தனாகி தபோபலத்தால் சுத்த நிச்சய நிஜஸ்வரூப ஸித்தியை
யடைந்தான், எ-று. (8)
978. பாகொத்த மொழியி னாரோ டின்பத்துப் படிந்து சீதா
மாகற்பத் திழிந்து மைந்தன் சயந்தனாய் வளர்ந்து மாய
போகத்துக் கிவரிச் சித்தி புகுதுநற் காட்சி போக
நரகத்துக் கிறைமை பூண்ட நம்பிநின் வரவி தென்றான்.
(இ-ள்.) பாகொத்த - வெல்லப்பாகுபோல் இனிமையாகிய,
மொழியினாரோடு - வசனத்தையுடைய தேவமாதர்களுடன், இன்பத்து -
சௌக்கியத்தில், படிந்து - தங்கி, சீதாமா - பூர்வம் ஸ்ரீதாமாவாயிருந்த
பிரம்ம கல்ப்பத்து தேவன், கற்பத்து - அந்த பிரம்ம கல்பத்தினின்றும்,
இழிந்து - ஆயுரவஸானத்து நழுவி, சயந்தன் - சயந்தனென்னும்
பெயரையுடைய, மைந்தனாய் - புத்திரனாகி, வளர்ந்து வளர்ச்சியுற்று,
மாயம் - நிலையில்லாத, போகத்துக்கு - ஸம்ஸார போகத்துக்கு, இவரி
- இச்சித்து, சித்திபுகுதும் - மோட்சமாகும்படியாகிய, நற்காட்சி -
ஸம்மியக் தரிசனமானது, போக - நீங்கிப்போக, நாகத்துக்கு -
பவணலோகத்துக்கு, இறைமை பூண்ட - எஜமானத்துவத்தை யடைந்த,
நம்பி - நம்பியே!, நின் - உன்னுடைய, வரவு - வருகையானது, இது -
இத்தன்மையாகும், என்றான் - என்று ஆதித்யாபதேவன்
தரணேந்திரனுக்குச் சொன்னான், எ-று. (9)
979. சேகொத்த மனத்த வேடன் றீவினை துரப்பச் சென்று
மாகவி பெற்ற வந்த வாயுவுங் கழிந்து மண்மேல்
நாகத்திற் றோன்றி மூன்றா நரகத்துப் புக்குத் தீமை
வேகத்தில் விலங்கி லைந்து பொறியுளுஞ் சுழன்று செல்வான்.
(இ-ள்.) (அவ்வாறு சொல்லி மேலும் சொல்லத்
தொடங்கினவனாய்), சேகு - மரவயிரத்தை, ஒத்த - நிகர்த்த, மனத்து -
மனத்தினையுடைய, வேடன் - |