பக்கம் எண் :


476மேருமந்தர புராணம்  


 

    கனைகழ லரசன் றன்மேற் கறுவினாற் பிறவி தோறும்
    நினைவிலேன் செய்த தீமை நீங்குமா றருளு கென்றான்.

     (இ-ள்.) இனையன -  இத்தன்மையான பவவரிசைகளை, கேட்டு
- (ஆதித்தியாபதேவன்  மேற்   கூறியபடி)  சொல்லக் கேட்டு, அந்த
வித்துத்தந்தன்    - அவ்   வித்தியுத்தம்ஷ்ட்ரன், தன்னை யிழித்து -
ஆத்ம    நிந்தனைபண்ணி,   மனமலி  - மனத்தில் மிகுந்த, கறுவு -
த்வேஷ  பரிணதியானது, நீங்கி - விலகி, வானவன் தன்னை - அந்த
ஆதித்யாப   தேவனை,   வாழ்த்தி - ஸ்தோத்திரம் பண்ணி, கனை -
சப்தியாநின்ற,  கழல் - வீரகண்டயத்தை யணிந்த, அரசன் தன்மேல் -
ஸிம்மஸேன    மஹாராஜன்  மேலே, கறுவினால் - த்வேஷத்தினால்,
பிறவிதோறும்  -  பவம்பவந்தோறும், நினைவிலேன் - ஆத்மத்தியான
மில்லாத அஞ்ஞானியாகிய என்னால், செய்த - செய்யப்பட்ட, தீமை -
பொல்லாங்குகள்,  நீங்குமாறு - நீங்கும் விதத்தை, அருளுக - எனக்கு
உபதேசித்தருளுக, என்றான் - என்று சொன்னான், எ-று.        (39)

1009. இறைவனா யுலக மேத்த விருந்தசஞ் சயந்தன் பாதம்
     நறையுலா மலர்க டூவி வணங்கென நமோவென் றேத்தி
     யறிவிலேன் செய்த தீமை பொறுக்கவென் றவுணன் போனான்
     உறுதிநின் றுரைத்த வானோ னுவந்துதன் னுலகம் புக்கான்.

     (இ-ள்.)  (அதுகேட்டு   ஆதித்யாபதேவன் அவனை நோக்கி),
இறைவனாய்   -   நாதனாகிய,    உலகம்   - இம்மூன்றுலகத்துள்ள
பவ்வியர்கள், ஏத்த - துதிசெய்ய, இருந்த - இராநின்ற, சஞ்சயந்தன் -
இச்சஞ்சயந்த  பட்டாரகருடைய, பாதம் - பாதங்களை, வணங்கென -
வணங்குவாயாகவென்று  சொல்ல, (அவ்வித்துத்தந்தன்), நறையுலாம் -
வாசனை    வீசுகின்ற,    மலர்கள்  தூவி - மலர்களை அவருடைய
பாதங்களிற்   சொரிந்து, நமோவென்று - நமோஸ்து நமோஸ்து என்று,
ஏத்தி -அவரை ஸ்துதி செய்து வணங்கி, அறிவிலேன் - புத்தியில்லாத
என்னால்,    செய்த   -  செய்யப்பட்ட, தீமை - பொல்லாங்குகளை,
பொறுக்க    வென்று   - க்ஷமை   செய்வீராகவென்று, அவுணன் -
அவ்வித்தியாதரன்,    போனான்    - தனதிடம் சென்றான், நின்று -
அவ்விடத்தில்    நின்று,  உறுதி - அவனுக்குறுதியாகிய தர்மங்களை,
உரைத்த   - சொல்லின, வானோன் - ஆதித்யாபதேவன், உவந்து -
ஸந்தோஷித்து,   தன்னுலகம்   -   தனது வாசஸ்தலமாகிய லாந்தவ
கல்பத்தை, புக்கான் - அடைந்தான், எ-று.                  (40)

1010. கறுவினா லொருவ னென்றுங் கடுநவை நரகி னாழ்ந்தான்
     பொறையினா லொருவன் புத்தே ளுலகெய்தி வீடு புக்கான்
     கறுவொடு பொறையி னாய பயனிவை கண்டு பின்னும்
     பொறையொடு செறிவி லாதார் புல்லறி வாள ரன்றே.