(இ-ள்.) கறுவினால் - குரோதபரிணாமத்தால்,ஒருவன் - பூர்வம்
ஸ்ரீபூதியென்னும் மந்திரியாகிய ஒருவன், என்றும் - என்றைக்கும்
(அதாவது : ஆயுக்கால பரியந்தம்), கடுநவை - கடுமையாகிய
துன்பமுடைய, நரகின் - நரகங்களில், ஆழ்ந்தான் - பலதடவை
மூழ்கினான், பொறையினால் - க்ஷமாபரிணாமத்தால், ஒருவன் -
ஸிம்மஸேனனென்னும் ஒரரசன், புத்தேளுலகு - தேவருலகத்தை, எய்தி
- பலதடவை யடைந்து, வீடு புக்கான் - (கடைசியில்) மோக்ஷத்தையு
மடைந்தான், கறுவொடு - த்வேஷத்தோடு, பொறையின் -
க்ஷமையினாலும், ஆய - உண்டாகிய, பயன் - பலன்களாகிய, இவை
கண்டு - இவற்றைத் தெரிந்து, பின்னும் - பிறகும், பொறையொடு -
க்ஷமையோடு, செறிவிலாதார் - சேராதவர்கள், புல்லறிவாளர் -
அற்பபுத்தியையுடைய அஞ்ஞானிகளாவார்கள், எ-று. (41)
பதினொன்றாவது :
பிறவிமுடிச்சருக்கம் முற்றிற்று. |