பக்கம் எண் :


498மேருமந்தர புராணம்  


Meru Mandirapuranam
 

அகழாகிய   (அதாவது :   ஜலத்தினால்  நிறைந்த   காதிகையாகிய)
இரண்டாம் பூமியையும், கண்டார் - பார்த்தார்கள், எ-று. (6)

 1054. ஆழமு நிறைவு முண்டே யாகிலு மலையென் பானி
      லூழிபேர்ந் தாலும் பேரா விதனைநா னொழிப்ப னென்றிங்
      காழிவந் திறைவன் பாத மடைந்துபூம் பட்டை போர்த்துச்
      சூழுந்தான் கிடந்த தொத்துத் தோன்றுமிப் பரிகை யென்றார்.

   (இ-ள்.)    (அவ்வாறு   பார்த்து),   இப்பரிகைதான்  -  இந்தக்
காதிகையானது,  ஆழமும்  -  ஆழமும்,   நிறைவும் - ஜலநிறைவும்,
உண்டேயாகிலும் -  உண்டாகியும், சூழுகிடந்தது - (ஸமவஸரணத்தின்
இரண்டாம்   பிராகாரமாகிச்)  சூழ்ந்திருப்பதைப்  பார்த்தால்,  ஆழி
ஸமுத்திரமானது, இங்குவந்து - இவ்விடம்வந்து, அலையென்பானில் -
அலையென்று      சொல்லும்    விதத்தில்,     ஊழிபேர்ந்தாலும் -
ஊழிஊழிகாலம் அனேகம் நீங்கினாலும், பேரா - நீங்காத, இதனை -
என்னிடமுள்ள இந்த அலையென்பதை, நான் - நான், ஒழிப்பனென்று
- ஒழித்து விடுவேனென்று,  பூம்பட்டைப் போர்த்து - புஷ்பங்களாகிற
பட்டுவஸ்திரத்தைப்       போர்த்துக்கொண்டு,    இறைவன்பாதம் -
ஜினேந்திரனது  பாதாரவிந்தத்தை,  அடைந்ததொத்து  -  சேர்ந்ததற்
கொப்பாகி,  தோன்றும் -   தோன்றாநின்றது,    என்றார் -  என்று
சொன்னார்கள், எ-று. (7)

 1055. மணிதெளித் தனைய வாரி வாசவான் சுவைய தார்ந்தங்
      கணுகுவார்க் காழ்ந்து தோன்றி யடையந்தவர் தாண்மட் டாகிப்
      பணிவுயர் விலாது போதிற் பயின்றுபைம் பொன்செய் வீதி
      மணியொளி பரந்து வான விற்களாய் மயங்கு நின்றே.

   (இ-ள்.)   மணி -  இந்திர   நீலரத்தினத்தை,  தெளித்தனைய -
அரைத்துக்  கரைத்துத்  தெளியவைத்ததற்குச்  சமானமாகிய, வாரி -
ஜலமானது,  வாசம்  -  பரிமளமாகிய,  வான் - அழகிய, சுவையது -
ரஸமானது,   ஆர்ந்து   -   நிறைந்து,   அங்கு   -  அவ்விடத்து,
அணுகுவார்க்கு    -    அடைந்தவர்களுக்கு,    ஆழ்ந்துதோன்றி -
ஆழமாகத்  தோன்றி,   அடைந்தவர்  -  உள்ளே  யடைந்தவர்க்கு,
தாண்மட்டாகி - முழந்தாள் பரியந்தமாகி,  பணிவு - தாழ்வும், உயர்வு
- மேடும், இலாது -  இல்லாது சமமாகி, போதில் - புஷ்பங்களினால்,
பயின்று -  நிறைந்து,  பைம் -  பசுமை  பொருந்திய,  பொன் செய்
-பொன்னினால் நிருமித்த, வீதி -  சதுர் மஹாவீதிகளும், மணியொளி
- இரத்தினங்களின் ஒளியானது, பரந்து - வியாபித்து, வானவிற்களாய்
- இந்திர   தனுசுவைப்போல  பஞ்சவர்ணமுடையனவாக,   நின்று -
நிலைபெற்று,    மயங்கும்     -   பார்ப்பவர்களைப்     பிரமிக்கச்
செய்கின்றதாகும், எ-று. (8)