பக்கம் எண் :


 சமவசரணச்சருக்கம்499


Meru Mandirapuranam
 

 1056. காதத்தி னரைய கன்ற காதிகைக் கமல மாதிப்
      போதைக்கொய் தங்கை யேந்திப் பொன்செய்தோ ரணங்கடந்து
      மேதக்க மணியி னாய பாதத்த வீதி நின்ற
      வாதிகோ புரத்தி னாதி நிலையள வாகி யம்பொன்.

   (இ-ள்.)  காதத்தின்    அரை   -   அரைக்காதம்,  அகன்ற -
அகலத்தையுடைய,   காதிகை  -  அகழில்  இராநின்ற, கமலமாதி -
தாமரை  முதலாகிய,  போதை  -  புஷ்பங்களை, கொய்து - பறித்து,
அங்கை -   அழகிய  கையினுள்,   ஏந்தி  -  எடுத்துக்  கொண்டு,
பொன்செய் -   பொன்னால்  நிர்மித்தவீதிகளிலுள்ள,   தோரணம் -
தோரணம்   முதலானவைகளை   யெல்லாம்,  கடந்து  -   தாண்டி
(அதாவது : இரண்டாம் ப்ராகாரமான காதிகாபூமியின் விஸ்தீரணமான
இரண்டு குரோச தூரத்தையும் போகி),  பாதத்தவீதி  - அவ்விடத்தில்
திக்குவீதிகள்    பிரதமத்தில்   சொன்ன    இரண்டு     காதத்தில்
நாலத்தொன்று    குறைந்த,       (அதாவது   :    ஒன்றரைக்காத
அகலமுடையதாகிய     வீதியில்),   ஆதிகோபுரத்தில்  - (இனிமேற்
சொல்லப்போகும்)  பிரதம   கோபுரமாகிய   உதயதர கோபுரத்தின்,
ஆதிநிலை -  முதல்  நிலை  எவ்வளவு  உயரம்    இருக்கின்றதோ
அவ்வளவு, அளவாகி - உன்னதமுடையதாகி, அம் - அழகிய, பொன்
- பொன்னினாலும்,   மேதக்க -  மேன்மை பொருந்திய, மணியின் -
இரத்தினங்களினாலும்,   ஆய -  அமைந்த  கோபுரமானது, நின்ற -
இராநின்றது, எ-று. (9)

 1057. பாலிகை முதல வாய பரிச்சந்த முடைய வற்றை
      மாலையுஞ் சாந்து மேந்தி வணங்கின ராகிப் போகி
      சீலம்போற் செம்பொ னிஞ்சிச் சிலைகளீ ரொன்ப தோங்கி
      மாலைபோற் சூழக் காத மகல்வல்லி வனத்தைச் சேர்ந்தார்.

    (இ-ள்.)   பாலிகை   முதலவாய   -   பாலிகை   முதலாகிய,
பரிச்சந்தம் - பரிவாரங்களை,  உடைய - உடைத்தாகிய (அதாவது :
கோபுராங்கமாகிய  கும்ப  முதலாகிய  எல்லா   லக்ஷணங்களையும்
உடைய), அவற்றை -  அக்கோபுரங்களையும், செம்பொன் - சிவந்த
பொன்னாலாகி,   சிலைகளீரொன்பதோங்கி  -   பதினெட்டு  வில்லு
உன்னதமுடையதாகி, சீலம்போல் -  சீலாச்சாரம்போல  ஒழுங்காகிய,
இஞ்சி - மதிலையும்,  மாலையும்  - பூமாலை முதலியவும், சாந்தும் -
சந்தனங்களும்,    ஏந்தி -   தரித்து,   வணங்கினராகி -  வணக்கம்
செய்தவர்களாகி,  போகி  - சென்று, மாலைபோல் - புஷ்பமாலையை
வட்டமாக வைத்ததுபோல,  சூழ் - சூழ்ந்திராநின்றதாகிய, (அதாவது :
இப்போது சொன்ன  மதிலுக்கு  அப்பியந்தர பாகத்தில் உள்ளதாகிய),
காதம்  அகல்  -   ஒருகாத  விஸ்தீர்ணமாகிய,   வல்லிவனத்தை -
கொடிப்பூவனமாகிய   வல்லி   பூமியை,  சேர்ந்தார்  -  (அவர்கள்)
அடைந்தார்கள், எ-று. (10)