1058. வல்லிமண் டபங்கள் பந்தர் வயிரவா
லுகத்த லங்கள்
வில்லுமிழ்ந் திலங்கும் பூமி
விழுந்தபூ வணையின் வீயைப்
புல்லும்வண் டோசை பூமி தேவனைப்
பாடல் போலு
மெல்லையி லிடங்க ளிவ்வா றியம்புதற் கரிய தொன்றே.
(இ-ள்.)
வல்லி - (அந்த மூன்றாம்
ப்ராகாரமாகிய) வல்லி
பூமியில், மண்டபங்கள் - மண்டபங்களும்,
பந்தர் - லதா
மண்டபங்களாகிய பூம்பந்தல்களும்,
வயிரம் - வஜ்ர
ரத்தினங்களாலாகிய, வாலுகம் - மணல்களையுடைய, தலங்கள் -
தரைகளாகி, வில் - கிரணங்களை, உமிழ்ந்து - கக்கி, இலங்கும் -
விளங்குகின்ற, பூமி - பூமியிலே, விழுந்த - உதிர்ந்து கிடக்கின்ற,
பூவணையின் - புஷ்பத்திரள்களில் உண்டாயிருக்கின்ற,
வீயை -
புதுமலரிலுள்ள மதுமகரந்தங்களை,
புல்லும் - மொய்த்துக்
கொண்டிருக்கின்ற, வண்டு - வண்டுகளின்,
ஓசை - ரீங்கார
சப்தமானது, பூமி - அப்பூமியே,
தேவனை - ஸ்வாமியை,
பாடல்போலும் - ஸ்துதிப்பதுபோலு
மாகாநின்றது, (இன்னும்)
எல்லையில் - அளவில்லாத, இடங்கள்
- அவ்வல்லிபூமியின்
இடங்களின்விதம், இவ்வாறு - இந்தப்பிரகாரம், இயம்புதற்கு -
வர்ணிப்பதற்கு, அரியது - அருமையானதாகிய, ஒன்று
- ஒன்றாகும்,
எ-று. (11)
1059. மல்லிகை முல்லை மௌவன் மாலதி மாத விநற்
பல்லிதழ் பத்தி பித்தி சண்பகங் குறிஞ்சி வெட்சி
சொல்லிய பிறவுஞ் செல்விச் சூட்டெனச் செறியப் பூத்த
வல்லிநன் மலர்க்கை யேந்தி வந்துகோ புரம டைந்தார்.
(இ-ள்.) வல்லி -
அந்த வல்லி பூமியில், மல்லிகை -
மல்லிகையும், முல்லை - முல்லைப் பூங்கொடிகளும்,
மௌவல் -
வனமல்லிகைகளும், மாலதி - சிறு
சண்பகமும், மாதவி -
குருக்கத்தியும், நல் - நன்றாகிய, பத்தி -
பந்திவரிசைகள், பல் -
பலவாகிய, இதழ் - இதழ்களையுடைய, பித்தி
- கருமுகையும்,
சண்பகம் - சண்பகமும், குறிஞ்சி - குறிஞ்சியும், வெட்சி - வெட்சியும்,
சொல்லிய - சொல்லப்பட்ட, பிறவும்
- இன்னும் அனேக
பூங்கொடிகளும், செல்வி - இலக்ஷ்மிதேவியினுடைய,
சூட்டென -
தலைச்சூட்டலங்காரததைப்போல, செறிய
நெருங்க, பூத்த -
புஷ்பித்தன, நன் - நன்மையாகிய,
மலர் - அப்புஷ்பங்களை
கையேந்தி - கையில் எடுத்துக்கொண்டு, வந்து - வந்து, கோபுரம் -
உதயதாம் என்கிற கோபுரத்தை, அடைந்தார் -
இவ்விருவர்களும்
சேர்ந்தார்கள், எ-று. (12) 1060.
காதமூன் றிரண்டு யர்ந்து காதநீண் டகன்று வாய்தல்
காதமாய்ச் சிறப்பு மும்மைப்
படிமைமுன் னிலைய தாகிச்
சோதியுட் குளித்து வாய்தல்
சோதிடத் தேவர் காப்பப்
போதரும் பதாகை சூழ்ந்த துதயகோ புரம தாமே.
|