பக்கம் எண் :


 வைசயந்தன் முத்திச்சருக்கம் 5


 

   மஞ்சிலம் பார்க ளாட லறிவன தெழுச்சி யாதி
   யெஞ்சிடா வந்த நாட்டின் பெருமையா ரியம்ப வல்லார்.

     (இ-ள்.)  ஐஞ்சிறப்பு  -  பஞ்ச  கல்யாண பூஜையை, அயரும் -
செய்யும்,   நால்வகைத்தேவர்   குழுவோடு   -  (பவண,   வியந்தர,
ஜோதிஷ்க்க,  கல்பவாசியராகிய) நான்குவகைத் தேவ கூட்டங்களோடு,
அம்பொன்   -   அழகிய   பொன்னாலாகிய,   இஞ்சி   சூழ்ந்து  -
மும்மதில்களால் சூழப்பட்டு, இலங்கும் - விளங்கும், ஏழுநிலம் - சப்த
பூமியையுடைய,  இறை   -  மூன்றுலகிற்கும்   நாதனாகிய   அருகத்
பரமேஷ்டி, இருக்கை  -  தங்குதலையுடைய,  வட்டம் - வ்ரத்தமாகிய
சமவசரணம்  (அதாவது  கோயில்),  அம் - அழகிய,  சிலம்பார்கள் -
பாதச் சிலம்புகளையுடைய  தேவஸ்த்ரீகளது,  ஆடல் - நர்த்தனங்கள்,
அறிவனது  -  சர்வஞ்ஞனுடைய   (அதாவது :  அருகத்பரமனுடைய),
எழுச்சி - ஸ்ரீ விஹாரம், ஆதி - முதலாகிய அதிசயங்களால், எஞ்சிடா
-  குறையாத,  அந்த  நாட்டின்  -  அந்தக் கந்தமாலினி நாட்டினது,
பெருமை  -  பெருமையை,  யார்  -  எவர்கள்,  இயம்ப  - சொல்ல,
வல்லார் - வல்லமையை யுடையவர்கள்? எ-று.

     பஞ்சகல்யாணமாவன:-  ஸ்வர்க்காவதரணம்,   ஜன்மாபிஷேகம்,
பரிநீஷ்க்கிரமணம்,  கேவலஞ்ஞானம்,  பரிநீர்வாணீம்   என்பனவாம்.
சப்தபூமி,  மும்மதில்,  ஸ்ரீ : விஹாரம்  முதலியவற்றின்  விவரங்களை
12-வது 13-வது சருக்கங்களில் பார்த்துக்கொள்க.                (8)

 9. மணியிலா மலையு மில்லை வனப்பிலா வனமு மில்லை
   கணியிலா நிலமு மில்லை கரும்பிலாக் காடு மில்லை
   யணியிலா மகளி ரில்லை யழகிலா மைந்த ரில்லை
   துணிவிலாத் துறவு மில்லை தூய்திலா வொழுக்க மில்லை.

     (இ-ள்.)  மணி - அரதனங்கள்,  இலா - இல்லாத,  மலையும் -
பர்வதமும்,  இல்லை - (அத்தேசத்தில்)  இல்லை,   வனப்பு - அழகு,
இலா  -  இல்லாத,  வனமும்  -  உத்தியானமும்,  இல்லை-, கணி -
மருதநிலம்  (விளை நிலம்),  இலா  -  இல்லாத,  நிலமும் - பூமியும்,
இல்லை-,  கரும்பிலா  -  கரும்புகள்  விளையாத,  நாடும் - ஊரும்,
இல்லை -, அணி - அழகு,  இலா - இல்லாத,  மகளீர்  -  ஸ்திரீகள்,
இல்லை-,  அழகிலா  -  நன்மையில்லாத,   மைந்தர்  -  புருஷர்கள்,
இல்லை-, துணிவு - திடன்  (தெளிவு,  நம்பிக்கை),  இலா - இல்லாத,
துறவும் -இல்லற நீக்கமும் (அதாவது : தபமும்), இல்லை-, தூய்திலா -
பரிசுத்த மில்லாத, ஒழுக்கம் - சாரித்திரமும், இல்லை-, எ-று.      (9)

 10. கற்பிலா மகளி ரில்லை கருணையில் லாரு மில்லை
    பொற்பிலா வறமு மில்லை போதமில் லாரு மில்லை