பக்கம் எண் :


6மேருமந்தர புராணம்  


 

    தற்கமில்லாருமில்லை தானமில்லாருமில்லை
    சொற்கண்மெய் யிலாத வில்லை தூயரல் லாரு மில்லை.

     (இ-ள்.)  கற்பு - பதிவிரதமென்னும்  நெறி,  இலா -  இல்லாத,
மகளீர்  -  ஸ்திரீகள்,   இல்லை-,   கருணை - தயவு,  இல்லாரும் -
இல்லாதவர்களும்,  இல்லை-,  பொற்பு  -  அழகு  (மிகுதி),  இலா -
இல்லாத,  அறமும் - தருமமும்,  இல்லை-, போதமில்லாரும் - அறிவு
இல்லாதவர்களும்,  இல்லை-,  தற்கம் - நியாயசல்லாபம்  (யோசனை),
இல்லாரும்   -   இல்லாதவர்களும்,   இல்லை-,   தானமில்லாரும் -
(சற்பாத்திரங்களில், அபய, ஆகார, ஒளஷத, சாஸ்திரமென்னும்) தானம்
பண்ணாதவர்களும்,   இல்லை-,  மெய்யில்லாத   -   சத்தியமில்லாத,
சொற்கள்    -    வசனங்களும்,    இல்லை-,    தூயரல்லாரும்  -
பரிசுத்தமில்லாதவர்களும், இல்லை-, எ-று.

    எதுகையின்ப     நோக்கித்    தர்க்கமென்பது     தற்கமெனத்
திரிந்துவந்தது.                                           (10)

11. மணிநல வைரம் பைம்பொன் வரன்றிமா திரையுஞ் சந்துந்
   துணிநல வகிலுங் கொம்புந் தோகையு மயிரு மேந்தி
   வணிகநல் லொருவன் போல வயலக மடுத்த வாறு
   பணிவிலாப் பழங்கொ டெங்கி னிலையெனப் பரந்த தன்றே.

     (இ-ள்.)  மணி  - இரத்தினங்களையும்,  நல்ல - நன்மையாகிய,
வைரம்   -    வைரங்களையும்,   பைம்பொன்    -   பசுமையாகிய
பொன்றுகள்களையும்,  வரன்றி  -  வாரி,  மா - பெரிய,  திரையும் -
அலைகளையும்,  துணிசந்தும்  -  சந்தனக்  கட்டைகளையும்,  நல் -
நன்மையாகிய,    அகிலும்  -  அகிற்கட்டைகளையும்,   கொம்பும் -
யானைக் கொம்புகளையும்,  தோகையும் - மயிலிறகையும்,  மயிரும் -
கவரிமான் மயிரையும், ஏந்தி - தரித்து,  நல் - நன்மையாகிய, அகிலும்
-  அகிற்கட்டைகளையும்,  கொம்பும்  -  யானைக்  கொம்புகளையும்,
தோகையும் - மயிலிறகையும்,  மயிரும் - கவரிமான் மயிரையும், ஏந்தி
- தரித்து,  நல்  -  நன்மையாகிய,  வணிகனொருவன்போல  -  ஒரு
வியாபாரியைப்போல,  வயலகம் - கழனியிடத்தை,  அடுத்த - சேர்ந்த,
ஆறு - நதியானது, பணிவிலா - குறைவில்லாத, பழங்கொள் தெங்கின்
-  பழத்தைக்   கொண்ட   தென்னமரத்தினுடைய,   இலை   என -
ஓலையைப்போல, பரந்தது - பல பிரிவுகளாகப் பரவிற்று. எ-று.

     ஆற்றின்  கால்கள்  தென்ன  மரத்தின்  இலையெனப்  பரந்து
பாயுமென்பது, ‘பழங்கொடெங்கிலையெனப் பரந்து பாய்புனல்", என்னும்
சீவக சிந்தாமணிச் செய்யுளடியாலுணர்க.)                      (11)

 12. குழைகளும் மலருஞ் செற்றிக் குயில்களு மயிலு மார்த்து
    மழையென மதுக்கள் பெய்து வண்டொடு தும்பி பாடி
    விழைவுறுந் தகைய வாகி வேண்டினார் வேண்டிற் றீயு
    மழகுடை மரங்கள் போன்ற வம்மலர்ச் சோலை யெல்லாம்.