பக்கம் எண் :


 வைசயந்தன் முத்திச்சருக்கம் 65


Meru Mandirapuranam
 

 136. கனிந்தநெய்க் கவளங் கையில் வைத்துடன் கழறு வாரை
     முனிந்திடுங் களிறு போல்வார் முத்தியை விளைக்கு நீரார்
     மனங்கொளத் துறந்தி டாதே வால்குழைத் தெச்சிற கோடுஞ்
     சுணங்கனைப் போலு நீரார் மாற்றிடைச் சுழலு நீரார்.

   (இ-ள்.)  கனிந்த - கனிவுபெற்ற, நெய்க்கவனம் - நெய்ச்சோற்றுத்
திரளையை, கையில்  -  தமது கையில், வைத்து - வைத்துக்கொண்டு,
உடன்    -    கூடவிருந்து,    கழறுவாரை    -  கூவி  யழைத்து
இதைத்தின்னக்கடவாயென்று விரும்பும் பாகர்களையும், முனிந்திடும் -
கோபித்து    வெறுக்கின்ற,    களிறுபோல்வார்    -   யானைக்குச்
சமானமானவர்கள்,  முத்தியை.  மோட்சத்தை,  விளைக்கும் - உண்டு
பண்ணும்படியான,  நீரார்  -  குணத்தையுடையவர்கள், மனங்கொள -
மனம்  நிறையும்படியாக,  துறந்திடாது  - விடாமல், வால்குழைத்து -
வாலை     ஆட்டிக்கொண்டு,    எச்சிற்கு    -   எச்சிலான அற்ப
அன்னத்துக்குங்கூட,   ஓடும்  -  ஓடுகின்ற, சுணங்கனைப்போலும் -
நாய்க்குச்  சமமாகிய,  நீரார் - குணத்தையுடையவர்கள், மாற்றிடை -
ஸம்ஸாரத்தில்,  சுழலும் - சுழலும்படியான, நீரார் - தன்மையுடையார்,
எ-று. (136)

 137. நஞ்சினை யமிர்த மென்றே யுண்டவ னயர்ந்து பின்னைத்
     துஞ்சுவ தஞ்சிக் கான்ற நஞ்சையே துய்த்தல் போலும்
     புஞ்சிய பொறியின் போகம் மாற்றிடைச் சுழற்று மென்னா
     வஞ்சிமுன் றுறந்த போகத் தருந்தவ னாசை தானே.

    (இ-ள்.)  புஞ்சிய     -    சேர்ந்திராநின்ற,    பொறியின்   -
இந்திரியங்களாலாகிய,  போகம் - போகோப போகமானது, மாற்றிடை
-  ஸம்ஸாரத்தில்,  சுழற்றும்  -  சுழலப்பண்ணும், என்னா  - என்று,
அஞ்சி -  (ஸம்ஸாரச் சுழற்சிக்கு) பயந்து, முன் - முன்னாலே, துறந்த
- நீக்கிய,   போகத்து  -   அந்தப்  போகோப  போகத்தின் மேல்,
(இவ்வாறு  ஏற்பட்ட)  அருந்தவன்  - அரிய  தவத்தையுடைய சயந்த
முனியின், ஆசைதான் - ஆசையானது, (எத்தகையதெனில்), நஞ்சினை
- விஷத்தை,அமிர்தமென்று - அமுதமென்று நினைத்து, உண்டவன் -
தின்ற ஒருவன்,அயர்ந்து - வருத்தத்தையடைந்து, துஞ்சுவது - இறந்து
விடுவதற்கு, அஞ்சி - பயந்து,  கான்ற  -  கக்கிவிட்ட,  நஞ்சையே -
அந்த  விஷத்தையே,  பின்னை  -  மறுபடியும்,  துய்த்தல்போலும் -
உண்ணுதலை நிகர்க்கும், எ-று. (137)

 138. ஐந்தலை யரவந் தன்வா யைந்துடன் கலந்த நஞ்சிற்
     றுன்பமோர் கடிகை யல்லாற் றுஞ்சினாற்றொடர்ந்தி டாதா
     மைம்பொறி யரவந் தன்வா யொன்றினா லாய நஞ்சு
     துஞ்சினா லநேக காலந் தொடர்ந்துநின்றடுங்கள் கண்டீர்.