(இ-ள்.) ஐந்தலை - ஐந்து
கிரசையுடைய, அரவம் -
ஸர்ப்பமானது, தன் வாய் ஐந்துடன் - தன்னுடைய
ஐந்துவாயினாலும்,
கலந்த - (கடித்துச்) சேர்ந்த, நஞ்சின் - விஷத்தினாலாகிய, துன்பம்
-
துயரமானது, ஓர் கடிகையல்லால் - ஒரு
நாழிகையேயிருக்குமல்லாமல்,
துஞ்சினால் - இறந்து விட்டால், தொடர்ந்திடாதாம் -
அதன்மேல்
சேர்ந்து வருத்தாதாம், ஐம்பொறி - பஞ்சேந்திரிய
விஷவாஞ்சையாகிற,
அரவந்தன் - ஸர்ப்பத்தினது, வாயொன்றினால் -
ஒருவாயினாலே,
ஆய - உண்டாகிய, நஞ்சு - விஷமானது, துஞ்சினால் -
சரீரம்
நீங்கினாலும், (தான் நீங்காமல்) அநேககாலம் -
நெடுங்காலம்
(அதாவது : கர்ம ஸ்திதிகாலபரியந்தம்), தொடர்ந்து
நின்று -
ஆத்மனிடத்தில் ஸத்துவத்தில் நின்று, அடும் -துன்பத்தைச்
செய்யும்,
எ-று.
கள்,கண்டீர் என்பன அசைகள்.
(138)
139. காட்சியைக் கலக்கி ஞானக் கதிர்ப்பினைத் திரித்துப புக்கான்
மீட்சியி லுலக மேற்று மொழுக்கத்தை
யழித்து வைய
மாட்சிபெற் றவனை வைய மதனுக்கே
யடிமை யாக்கு
மாட்சித்தா னிதானந் தன்னை மனங்கொள்ளார்
மதியின் மிக்கார்.
(இ-ள்.) காட்சியை -
ஸம்மியக்தர்சனத்தை, கலக்கி - சிதைத்து,
ஞானம் - ஸம்மியக்ஞானமாகிற, கதிர்ப்பினை, பிரகாசத்தை,
திரித்து -
கெடுத்து, மீட்சியில் - திரும்புதலில்லாத,
உலகம் -
ஸித்திக்ஷேத்திரத்தில், ஏற்றும் -
உயர்த்திச்சேர்க்கும் படியான,
ஒழுக்கத்தை - சம்மியக்சாரித்திரத்தையும், அழித்து
- கெடுத்து,
புக்கான் - (சயந்தமுனி) நிதானசல்லியத்தால்
பவணலோகஞ்சேர்ந்து
தரணேந்திரனானான், வையம் - இந்த
உலகத்தில், ஆட்சி -
(நிதானசல்லியத்தால்) அதன் ஆளுகையை,
பெற்றவனை -
அடைந்தவனை, வையம் - இந்தவுலகமானது, அதனுக்கு -
அதற்கே,
அடிமையாக்கும் - அடிமையாகச்செய்யும்,
மாட்சித்து -
மாட்சிமையையுடையது, (ஆதலால்) நிதானந்தன்னை
- நிதான
சல்லியமாகிற தோஷத்தை, மதியின் மிக்கார் -
புத்தியிற் சிறந்த
பெரியோர்கள், மனங்கொள்ளார் - மனதிலே
கொள்ளமாட்டார்கள்.
எ-று.
மாட்சித்தால் என்பதில், ஆல் - அசை.
(139)
140. ஒழிந்தநால் வினையும்
வென்றிட்டுலகொரு மூன்று மேத்த
வெழுந்துசென் றுலகத் துச்சி
யெய்தினான் வைச யந்த
னழுந்திய நிதானத் தாலே சயந்தனவ்
வமர னாய்க்கீழ்
விழுந்தன னொழிந்த வீரன் சரிதையான்
விளம்பலுற்றேன்.
(இ-ள்.) ஒழிந்த -
மீதியாகிய, நால்வினையும் -
(அகாதிகருமங்களாகிய வேதநீயம், ஆயுஷ்யம்,
நாமம்,
கோத்திரமென்னும் நாலுவிதமான) கருமங்களையும்,
|