பக்கம் எண் :


 வைசயந்தன் முத்திச்சருக்கம் 67


Meru Mandirapuranam
 

வென்றிட்டு   -   ஜெயித்து,    உலகொருமூன்றும்  -   இந்தமூன்று
லோகத்திலுமுள்ளபவ்வியப்      பிராணிகளெல்லாம்,     ஏத்த   -
ஸ்தோத்திரம்பண்ண,     வைசயந்தன்    -     வைஜயந்தரென்னும்
அருகத்பட்டாரகர்,   எழுந்துசென்று   -  ஊர்த்துவகதிஸ்வபாவமாகச்
சென்று,உலகத்துச்சி - மூன்றுலகத்துக்கும் உச்சியாகிய ஸித்தியென்னும்
இடத்தை, எய்தினான் - ஸ்வயம்புத்தன்மை பெற்றடைந்தான்,அழுந்திய
- மனதிலுண்டாகிய,   நிதானத்தாலே   -  நிதான  சல்லியமென்னும்
தோஷத்தினாலே,   சயந்தன்   -   ஜயந்தமுனி,   அவ்வமரனாய் -
அத்தரணேந்திரனாகவே,  கீழ்  -  பவணலோகத்தில்,  விழுந்தனன்-
அடைந்தான்,  ஒழிந்த - எஞ்சிய, வீரன் - வீரபுருடனாகிய சஞ்சயந்த
முனியினுடைய,    சரிதை   -   சரித்திரத்தை,   யான்   -   நான்,
விளம்பலுற்றேன் - இனிச்சொல்வேன், எ-று. (140)

       வைசயந்தன் முத்திச் சருக்கம் முற்றுப்பெற்றது.