பக்கம் எண் :


 சஞ்யந்தன் முத்திச்சருக்கம் 71


 

வேறு.

 147. வித்துத் தந்த னென்பவன் விச்சா தரவேந்தன்
     மத்தத் தந்தி போல்பவன் வானம் வழியாக
     முத்தத் தந்த மொய்குழற் சாமை யொடுசெல்வான்
     சித்தத் தந்த மின்றி நின்றவன் மேற்சென்றான்.

     (இ-ள்.)வித்துத்தந்த னென்பவன் - 1வித்யுத்தம்ஷ்ட்ரன் என்னும்
பெயரையுடையவனாகிய,  விச்சாதரவேந்தன்   -   வித்தியாதரவரசன்,
மத்தம்  -  மதம்   பொருந்திய,   தந்திபோல்பவன்  -  யானைக்குச்
சமானமாகியவன்,     முத்தம்    -    முத்துப்போன்ற,    தந்தம் -
பற்களையுடைய,  மொய்  -  நெருங்கிய,  குழல் - அளகத்தையுடைய,
சாமையொடு - தனது  தேவியாகிய சியாமையுடன், வானம் வழியாக -
ஆகாயமார்க்கமாக,   செல்வான்  -  விமானாரூடனாகிச்  செல்பவன்,
சித்தத்து  -   மனதில்,   அந்தமின்றி   -   இருளின்றி  (அதாவது :
ராகாதிகளின்றி),   நின்றவன்  மேல்  -  யோகத்தில்  பொருந்திநின்ற
சஞ்சயந்த முனியின் மேலாக, சென்றான் - போயினான், எ-று.     (7)

 148. மண்மே னின்ற மாதவர் கோன்மீ தோடாதாய்
     விண்மே னின்ற விமானங் கண்டு வியப்பெய்திப்
     புண்மேல் வேலா லேறுண் டான்போற் புகைந்தாற்றான்
     கண்மேற் கண்டான் கைவல செல்விக் கணியானை.

     (இ-ள்.)  மண்மேல்  -  பூமியின்மேல்,  நின்ற  -  யோகத்தில்
பொருந்திநின்ற,    மாதவர்கோன்மீது  -    மஹா    தபஸையுடைய
முனிவர்களுக்கெல்லாம்    முதல்வனாகிய   இச்சஞ்சயந்த  முனியின்
மேலாக, ஓடாதாய் - செல்லாததாகி, விண்மேல் - ஆகாயத்தில், நின்ற
- நிற்கப்பட்ட,  விமானம்  -  தனது  விமானத்தை, கண்டு - பார்த்து,
வியப்பெய்தி  -   ஆச்சரியமடைந்து,  கைவலசெல்விக்கு  -  கேவல
ஞானமாகிய  இலக்ஷ்மிக்கு,  அணியானை  -  அழகு  செய்பவனாகிய
தலைவனாகும்  தன்மையையுடைய  இம் முனியை, கண்மேல் - தனது
கண் முன்பாக, கண்டான் -  பார்த்த அவன், புண்மேல் - இரணத்தின்
மேல், வேலால் - வேலாயுதத்தால், ஏறுண்டான்போல் - அடிபட்டவன்
போல், புகைந்து -   கோபித்து,  ஆற்றான்  -   பொறாதவனானான்,
எ-று.                                                   (8)

 149. காணா நின்ற வேரங் கனற்றக் கடிதோடி
     மாணா னேந்தி மாதவர் கோனைக் கொடுவந்து
     சேணா றோடும் விமான மேற்றிச் செல்கென்றான்
     வேணார் வெள்ளி மாலையி னிவட்கீழ்ப் பரதத்தே.

____________________________________________

1ஜொலிக்கும் பற்களையுடையவன்; காரணப் பெயர்.