மலையினது முடிமுதல் அடிவரை அறாதொழுகும் அருவிகள் வானுலகிற்கு ஏற அமைத்த ஏணிகள் போலாக விளங்கிக் கல்லென்னும் ஒலியுடன் பாலியாற்றிற் கலந்தன. பாரிடங் குழித்து வீழும் பல்வயின் அருவி யெல்லாம் ஓரிரும் பாலி யாற்றின் ஒருங்குசென் றணையுந்தோற்றம் சீரிய புவனந் தோறுஞ் சிதறிய வினைக ளெல்லாம் ஓரிடத் தொருவன் றன்பால் உடங்குசென் றுறுதல் போலும். 15 | பல்வேறிடங்களில் குழி செய்து வீழும் அருவி யாவும் பாலி நதியில் ஒருங்கு கூடும் காட்சி, வெவ்வேறுடம்புடன் வெவ்வே றுலகத்துச் செய்த வினைப்பயன்கள் ஒரு பிறப்பின்கண் வந்துறுதலை ஒக்கும். விலகிவீழ் அருவித் தாரை வேறுவே றாக ஓடிக் குலநதிப் பாலி வைப்பின் ஏகமாய்க் கூடுந் தோற்றம் அலகில்பல் வழியும் மூதூர் அணிமையின் ஒன்றா மாறும் பலபல மதமும் ஈற்றின் ஒருவழிப் படலும் போலும். 16 | கால் பலவாய் ஓடிப் பின் பாலியின் ஒன்றாய்க் கூடுங்காட்சி, பேரூரை அடைதற்கு அமைந்த பல வழிகளும், ஒரு வழிப் படுதலையும், சமய நெறிகள் பலவும் முடிந்த முடிபாகிய ஒருவழிச் செலவையும் ஒக்கும். விலகி-இடையிட்டுத் தவழ்ந்து; அருவி மாலையாக எனலும் பொருந்தும். ஓடி-பொருந்தி. குலம்-மேன்மை. மலைநகைத் தனைய காட்சி வயின்வயின் அருவித் தாரை சிலையினின் றிழிந்து மண்மேல் திரண்டுசென் றணையுந் தோற்றம் உலவையோ டிகலிச் சேடன் உயர்வரைக் குடுமி யெல்லாம் பலதலை விரித்துப் பொத்திக் கிடந்தஅப் பான்மை போலும். 17 | நந்தி மலையினது புன்சிரிப்பின் வெள்ளொளிபோலத் திகழும் அருவிகள் மலைமுகட்டிற் பலவாய், இழிந்து மண்ணில் ஒன்று படும் காட்சி, வாயுதேவனொடு பகைத்து ஆதிசேடன் தனது ஆயிரம் படங்களால் கைலைமலைச் சிகரங்களைப் பொதிந்ததொக்கும் என்க. உலவை-காற்று; வாயுதேவன்; உலவுவதென்னும் பொருளது. குரைபுனல் தொண்டை நாட்டைக் குறும்பெறிந் தடிப்ப டுத்துப் புரைதப நடாத்து கென்னாப் புதுமுகி லரசன் நந்தி வரைமிசை யிருந்து வேந்தா மணிமுடி சூட்டி உய்ப்பத் திரைபடு பாலி வல்லே சிலையினின் றிழித்து போந்து. 18 | மேகமாகிய புதிய அரசன் நந்தி மலையாகிய அரசவையில் வைத்துப் பாலியாகிய தன் மகனுக்கு மணிமுடி சூட்டி இளவரசாக்கித் |