பக்கம் எண் :


வன்மீகநாதப் படலம் 345


உறப்புறும் எங்களுக் குதவும் உண்டியும்
அறத்தொழில் பயிலிய மானர்க் கான்றவான்
துறக்கமும் இல்லையாய் விட்ட துட்கென
இறத்தலின் எச்சன்இவ் வுலகின் எம்பிரான்.       12

     எம்பெருமானே! வலிமை மிகுதற்குக் காரணமாக எங்களுக்குதவும்
உண்டியாகிய அவியும், அறச் செயலாகிய வேள்வியைச் செய்கின்ற
இயமானர்க்கு அமைந்த தூயசுவர்க்கமும் இல்லையாயின. அச்சந்தோன்ற
இவ்வுலகில் யாக வடிவினன் இறத்தலின்,

     விட்ட, அன்சாரியை தொக்கது. துட்கு-அச்சக் குறிப்பு.

ஆதலின் எச்சனுக் களித்தி சென்னியென்
றோதினன் வேண்டலும் உரைத்தல் மேயினான்
மாதர்வெண் குழச்சிறு மதிக்கொ ழுந்தினைப்
போதொடு மிலைச்சிய சடிலப் புங்கவன்.         13

     ஆதலின், திருமாலுக்குத் தலையை அளித்தருளாய் என்று
வேண்டினன்; வேண்டவும், அழகிய வெள்ளிய இளைய சிறிய
மதிக்கொழுந்தினை மலரொடும் சூடிய சடையுடைப் பெருமானார் கூறத்
தொடங்கினார்.

எம்புடை வரம்பெறும் இரும ருத்துவ
உம்பரின் அவன்தலை ஒன்றிக் கூடுக
நம்பும்இவ் விருவரும் நந்தம் ஆணையால்
பம்பிய வேள்வியில் பாகம் எய்துக.             14

     ‘எம்மிடத்து வரம்பெறும் அசுவினி தேவர்களாகிய இருமருத்து வரால்
அம்மாலின் தலை இணைந்து கூடுக. விரும்பத் தகும் இத்தேவவயித்தியர்
இருவரும் நம்முடைய ஆணையால் செறிந்த யாகங்களில் அவிப்பாகம்
எய்துக.’

என்றருள் மழுவலான் சரணம் ஏத்திமற்
றொன்றிது வேண்டுவான் உடைய நாதனே
மன்றநின் அருளினால் புற்றின் வாய்எழூஉத்
தின்றுநா ணறச்செயுந் திறல்பெற் றேனரோ.      15

     என்றருளும் மழுவலான் திருவடிகளைத் துதித்து மேலும் ஒன்றாகிய
இதனை வேண்டுவான்; ‘எங்களை அடிமையாக உடைய நாயகனே அறுதியாக
நின்னுடைய அருளால் புற்றிடை எழுந்து நின்று நாணியை அறுக்கும்
வலிமையைப் பெற்றேன்.’

ஆதலின் வெவ்வினைத் தொடக்க றுக்கும்இம்
மேதகு வரைப்புவன் மீக நாதம்என்
றோதவும் கண்டவர் பிறவி ஓவவும்
ஈதிநீ வரமென விடையின் ஏந்தலும்.            16