|      ‘அவனே குற்றமற்ற பரப்பிரமம்; பழையோன் அவனே; எல்லா    வற்றையும் காரியப்படுத்துகிற காரணனும் ஆவன்; யாவர்க்கும் அவனே
 இறைவன்; வழிபடுவார்க்கு அருள் வீட்டினை வழங்குவோனும் அவனே’
 என உணர்த்தி வேறு வேறாகவும் அந்நிலையில் கூறின.
      புராணன்; முது முதல்வன்.	 இருக்கு வேதங் கூறல்	 		| ‘‘எச்சன் றனக்கும் இமையோர்க்கும்எவ் வேதி யர்க்கும் அச்சங் கரனே அரசன்விசு வாதி கன்சீர்
 நச்சும்உனை ஈன்றருட் பார்வையின் நோக்கி நல்கும்
 மெய்ச்சித்துரு என்றறி’’ என்ற திருக்கு வேதம்.        9
 |       ‘திருமாலுக்கும், தேவர்க்கும், எத்திறத்து வேதியர்க்கும் அச்சங்கரனே    அரசனாவன்; உலகினைக் கடந்து நிற்றலின் விசுவாதிகன் ஆவன்; படைப்பை
 விரும்புகின்ற உன்னைப் படைத்துக் கருணை நோக்குதவி அதனை வழங்கும்
 உண்மை அறிவுரு என்றறிதி’ என்றது இருக்கு வேதம்.
             ‘படைப்போற் படைக்கும் பழையோன்’ (திருவாசகம்).	 எசுர் வேதங் கூறல்	 		| ‘‘தன்கூற்றில் வருங்கண நாதர் தடுக்க லாற்றாக் கொன்கூர்சர பாதிய ரால்வயங் கூறும் விண்ணோர்
 வன்காழ்வலி செற்றவன் யார்அவ னேம திக்கு
 நன்காரணம்’’ என்று நவின்ற தடுத்த வேதம்.      10
 |       தன் வடிவினின்றும் தோன்றிய கணநாதர்கள் தடுக்கலாகாத அச்சம்    மிகுதற்குக் காரணமாகிய சார்த்தூலர் ஆதியரால் வெற்றிச் செருக்குறும்
 தேவர்களின் மிகு வயிர வன்மையை அழித்தவன் யார்? அவனே
 மதிக்கத்தகும் உண்மைக் காரணனாவன் என்று கூறியது அடுத்தெண்ணப்படும்
 எசுர்வேதம்.
 சாம வேதங் கூறல்	 		| தோலாஅவை நாப்பண் அடைந்து துரும்பு நட்டு மாலாதி விண்ணோர் வலிமுற்றவும் மாற்ற வல்லோன்
 ஆலாலம் உண்டோன் அவனேஅகி லங்களுக்கு
 மேலாய ஏது’’ எனவிண்டது சாம வேதம்.         11
 |       ‘அசுரரை வெற்றி கொண்ட தேவர் சபை நடுவில் வந்து துரும்பினை     நாட்டித் திருமாலாதி தேவர் வலி முழுதையும் போக்க வல்லோனும், விட
 முண்டு கண்டத் தடக்கினோனும் ஆகிய அவனே அனைத்துலகங்களுக்கும்
 மேலாய காரணன்’ என விளம்பிற்று சாம வேதம்.
 |