சூல தீர்த்தம் பைத்தலைப்பூண் வயிரவனார் பணைத்த தடந்தோள் அந்தகனை முத்தலைச்சூ லத்தலைநின் றிழித்த ஞான்று முழங்கழல்வாய் அத்தகைத்திண் சூலத்தால் அகழ்ந்த சூலத் தடந்தீர்த்தம் இத்தரைக்கண் சிறப்பெய்தும் உவாவில் அந்நீர் இனிதாடி. 2 | பாம்பினை அணிகலனாகப் பூண்ட வயிரவனார் மிகப் பெருத்த தோளுடைய அந்தகாசுரனை மூவிலைச் சூலத்தினின்றும் இறக்கியகாலத்துத் தீயை உமிழ்கின்ற திண்ணிய அச்சூலத்தால் தொட்ட சூல தீர்த்தம் இவ்வுலகில் சிறப்பு மிகும். அமாவாசை பௌர்ணமிகளில் அந்நீரில் மூழ்கி, செவ்வந்தீச்சரம் தென்புலத்தோர் கடன்செலுத்தில் அனையர் துறக்கஞ் சென்றெய்தி, இன்புறுவார் அதன்கரைக்கண் இலிங்கம் அமைத்து மருத்திறைவன், மென்பனிநீர் செவ்வந்தி வேரிச் செழும்பூப் பலகொண்டு, வன்பகல வழிபட்டுக் கந்த வாகன் எனப் பெற்றான். 3 பிதிரர்க்கு நீர்க்கடனாற்றில் முன்னோர் சுவர்க்கம் புக்கு இன்பமடைவர். அத்தீர்த்தக் கரையில் சிவலிங்கம் நிறுவி வாயுதேவன் மெல்லிய பனி நீரையும் தேன் பொருந்திய செவ்வந்தியின் செவ்விய மலர்கள் பலவும் கொண்டு தீமை நீங்க வழிபாடு செய்து நறுமணத்தைச் சுமந்து வருவோன் எனப் பெற்றனன். பரிதிக் குளம் மருத்தேத்துஞ் செவ்வந்தீச் சரமால் வரைப்பின் வடகுடக்காந் திருத்தேத்துக் கதிர்ப்பரிதிச் செல்வன் பரிதிக் குளந்தொட்டுக் கருத்தேய்த்து வீடளிக்கும் அந்நீ ராட்டிக் கருதார்ஊர் உருத்தேத்துஞ் சுரர்க்கருளும் ஒளியைத் தொழுதுவரம்பெற்றான். 4 | வாயு வழிபாடு செய்த செவ்வந்தீச்சரமாம் பெருமை பொருந்திய சூழலின் வடமேற்காகும் அழகிய இடத்தில் கதிர்களையுடைய சூரியன் தன் பெயரால் சூரிய தீர்த்தம் வகுத்துப் பிறவி நோயைப் போக்கி வீடு பேற்றினை வழங்கும் அந்நீரால் திருமுழுக்காட்டிப் பகைவருடைய முப்புரங்களை வெகுண்டழித்துப் போற்றுந் தேவர்க்கருள் செய்யும் பரஞ்சுடரைத் தொழுது வேண்டும் வரங்களைப் பெற்றனன். சந்திர தீர்த்தம் வீங்கிருள்சீத் தொளிபரப்பிப் பைங்கூழ் புரக்கும் வெண்கதிரோன் தேங்கமல முகைஅவிழ்க்குஞ் சருவ தீர்த்தத் தென்திசையின் ஆங்கண் நறுஞ்சுவைத்தெள்ளாரமுதத்தடந்தொட்ட தன்கோட்டி பாங்குபெறப்பிஞ்ஞகன் தாள் அருச்சித் தேத்திப்பயன்பெற்றான். | |