வரையாது வழங்கும் வள்ளலார் அருளும் திருவாக்கைக் கேட்டு மேன்மேலெழும் மகிழ்ச்சியின் மலர்ந்தனர். ஆழமுடைய கடல் சூழ்ந்த புவியிற் பிறந்து, புகழப் பெறுஞ் சிறப்பினையுடைய காஞ்சியை அடைந்தனர். இலிங்கம் அங்கண் இனிதி ருத்திநூற் புலங்கொள் முறையிற் பூசை ஆற்றுபு கலங்கு பிறவிக் கரிசின் நீங்கினான் மலங்க ருஞ்சீர் வாம தேவனே. 7 | அருட்குறி நிறுவி விதிப்படி பூசனை புரிந்து கொட்புறு பிறவிக் குற்றத்தினின்றும் வருந்துதலைத் தவிர்ந்தனர் வாமதேவர். கலிநிலைத் துறை அன்ன வாற்றாற் பிறவாத் தான மாயதால் இன்ன தானம் வழிபட் டேத்தப் பெற்றவர் பின்னர் மாதர் கருவின் எய்திப் பேதுறார் கன்னி பாகன் கருணை வெள்ளங் காண்பரே. 8 | அதனால் அவ்விடம் பிறவாத் தானம் என்றாயிற்று. இங்கு வழிபடுவோர் பின்பு மகளிர் கருவிற்றங்கி உள்ளம் கலங்கார். உமையம்மையார் கணவர் அருட்பெருக்கில் மூழ்குவர். கன்னி-அழிவில்லவள். அங்கட் போற்றி வாம தேவன் அருளினால் துங்கக் கயிலை எய்தி நோன்தாள் தொழுதெழூஉக் கங்கைச் சடையான் உதவி லிங்கங் கைக்கொடு பங்கப் பழனக் காஞ்சிப் பதியின் மீண்டரோ. 9 | வாமதேவர் ஆங்கு வழிபட்டுப் பெருமான் அருளால் உயர்ச்சியுடைய கயிலையை எய்தி வலிய திருவடிகளைத் தொழுதெழுந்து பெருமானார் அருளிய சிவலிங்கத்தைக் கைக்கொண்டு சேறுடைய வயல் சூழ்ந்த காஞ்சியை மீண்டும் அடைந்து, முத்தீச்சரம் மேன்மை சான்ற பிறவாத் தான மேற்றிசை ஞான வாவி ஞாங்கர் முத்தீச் சரனென மான முத்தித் தளியின் நிறுவி வாழ்த்தினான் ஏன வெண்கோட் டணியார்க் கினிதாம் அன்னதே. 10 | மேன்மை அமைந்த பிறவாத் தானம் எனும் தலத்திற்கு மேற்குத் திசையில் ஞானதீர்த்தத்திற்கு அயலில் முத்தீச்சரப்பிரானெனப் பெருமை யுடைய முத்தீச்சரர் திருக்கோயிலில் நிறுவிப் போற்றினார். அத்தலம் பன்றிக் கோட்டினை அணிந்த பிரானார்க்கு இனியதாகும். பிறவாத்தானப் படலம் முற்றிற்று ஆகத் திருவிருத்தம்-1650 |