பக்கம் எண் :


526காஞ்சிப் புராணம்


என்றும் யாம்மகிழ் ஏகம்ப லிங்கமுன்
சென்று நம்முடித் திங்கள் நிலாத்தயல்
நின்று கச்சி நிலாத்துண்ட மாலென
ஒன்று நாமம் பெறுதிஎன் றும்பர்கோன்.          8

     எக்காலமும் யாம் மகிழ்ந்து விளங்கும் திருவேகம்பச் சிவலிங்கத்தின்
திருமுன்னர் எய்தி நம் திருமுடியில் உள்ள சந்திரனது நிலவிற்கு அருகில்
நின்று கச்சி ‘நிலாத்துண்டப் பெருமாள்’ எனப் பொருந்திய திருப்பெயர்
பெறுதி’ என்று மகாதேவர்,

நாம வெந்துயர் தீர்திறம் நல்குபு
வாம மேகலை யோடும் மறைந்தனன்
தூம லர்த்துள வோனும் தொழுதெழூஉத்
தீமை தீரத் திருமுன்னர் வைகினான்.             9

     அச்சத்தைத் தருகின்ற வெப்புநோய் நீங்கும் வகை அருள்செய்து
அழகிய மேகலையாராகிய அம்மையொடும் மறைந்தனர். திருமாலும் தொழு
தெழுந்து துன்பமொழிய ஏகம்பர் திருமுன் வைகினர்.

கவுசிகீச்சரம்

கரிய வன்பணி கண்ணலிங் கேசனை
உரிய அன்பின் வழிபடு வோர்உம்பர்
மருவி வாழ்குவர் மற்றுங் கவுசிகீச்
சரம்ஒன் றுள்ளது சங்கரன் தானமே.             10

     கரிய திருமால் வழிபாடு செய்த கண்ணலிங்கேச இறைவனை
வழிபடற்குரிய அன்பினால் வழிபடுவோர் மேலுலகைத் தலைப்படுவர்.
மேலும், கவுசி கீச்சரம் என்னும் சிவபிரான் இருக்கை ஒன்றுள்ளது.

வரைஅ ணங்கு வடிவிற் கழிந்தகா
ருரிவை கோசத் துதித்த கவுசிகி
இருமை அன்பின் இருத்தி அருச்சனை
புரியும் பொற்பது மற்றும் புகலுவாம்.             11

     மலைமகள் வடிவினின்றும் கழிந்த கருஞ்சட்டையி லுதித்த கவுசிகி
பேரன்பினால் சிவலிங்கம் இருத்தி அருச்சனை புரியும் சிறப்பினது. மேலும்,
கூறுவோம்.

மாகாளேச்சரம்

எண்சீரடி யாசிரிய விருத்தம்

     உலகாணித் தடமருங்கு மாகா ளேசம் ஒன்றுளது மாகாளன்
எனும்பே ரன்பின், விலகாத பாப்பரசு வீடுபேறு விழைந்தேதென்
திசைக்கயிலை வேணித் திங்கட், கலையானைத் தொழுதுறைநாள்
ஆணை யாற்றாற் காஞ்சியிற்போந் தவ்விலிங்கம் நிறுவிப் போற்றி,
நிலம்நீடு தென்கயிலை மீள நண்ணி நீப்பரிய பெருவாழ்வு நிலாய
தன்றே.                                           12