பக்கம் எண் :


குமரகோட்டப் படலம் 529


     அங்கண் நின்றுவிளை யாட்டயர் செவ்வேல் அண்ண
லைச்சிறிதும் நோக்கலன் நண்ணி, மங்கை பாகனை வணங்கி வழுத்தி
வாழ்வு பெற்றுவிடைகொண்டு தனாது, பொங்கு சீர் உலகம், எய்திய
மீண்டான் மீளும் அப்பொழுதும் ஆவயின் ஆடுந், துங்க
வேல்இறையை நோக்கலன் ஏகத்தோகை மஞ்ஞையுடையான் அது
கண்டான்.                                          5

     அவ்விடத்திருந்து திருவிளையாடலைப் புரியும் செவ்வேற்
பெருமானாரைச் சிறிதும் மதியானாய் அம்மை அப்பரை நண்ணி வணங்கி
துதித்தலான் வாழ்க்கை எய்திச் செலவு பெற்றுக்கொண்டு தனது மிக்க
சிறப்பினையுடைய பிரமலோகத்தை அடைய மீளும் பொழுதும் அங்கு ஆடல்
செய்யும் உயர்ச்சியையுடைய வேற் பெருமானாரை மனங்கொள்ளானாய்ச்
செல்ல மயிலுடையார் அதனை எண்ணினர்.

பிரமன் சிறைப்படல்

     செழும லர்க்கமலம் வைகிய செம்மல் இகழ்ந்து செல்லும்அறி
வின்மை குறித்து, விழிசி வந்துகுறு மூரல் அரும்பி வருக ஈண்டென
விளித்தலும் அன்னோன், கழிசெ ருக்கினன் வணங்கி அடங்கிக்
கைகள் கூப்பிநணு கிப்புடை யுற்றான், கொழிமறைப்பனுவ லான்முகம்
நோக்கிக் குன்றெ றிந்தசுடர்வேல் இறைவிள்ளும்.               6

     பிரமன் மதியாது போகக் காரணமாகிய அறியாமையைத் திருவுள்ளங்
கொண்டு கட்கடை சிவந்து புன்முறுவல் பூத்து ‘இங்கு வருக’ எனக் கூவி
அருளலும், அவன் மிகு தருக்கினனாய் வணங்கி அடங்கிக் கைகளைக்
குவித்து மிக நெருங்கினன், வேதியன் முகத்தை நோக்கிக் கிரவுஞ்ச கிரியைப்
பிளந்த சுடர் வேலனார் திருவாய் மலர்வர்.

     யாவன் நீஉறைவ தெவ்விடம் மன்னும் யாது செய்தொழிலும்
எக்கலை வல்லாய், நீவி ளம்புகென யான்பிர மன்சீர் நிறைஅ
ருட்கருணை நுந்தை எனக்கன், றோவ றுங்கலைகள் முற்றும் விளங்க
ஓது வித்துலகம் நன்கு படைப்பான், ஏவ வைகுறுவல் சத்தியலோகத்
தென்று பன்முறை வணங்கி உரைத்து.                         7

     ‘யாவன் நீ? உறையுமிடம் யாது? நிலைபெறும் தொழில் யாது?
எக்கலை வல்லை? கூறுக வென்றருளலும், ‘யான் பிரமன்; மிகு சிறப்பினையும்
நிறைந்த பேரருளையும் உடைய நும் தந்தையார் எனக் கன்று ஒழிவறுங்
கலைகள் முழுதும் விளங்க ஓதுவித்து நன்கு உலகைச் சிருட்டி செய்யப்
பணிப்பச் சத்திய லோகத்தில் வைகுவேன்’ என்று பன்முறை வணங்கிக் கூறி,