பக்கம் எண் :


586காஞ்சிப் புராணம்


இன்னவை புகன்றனை மகிழ்ச்சி எய்தினேம
பன்னுதும் மனக்கொளப் பரிந்து கேள்மதி.         95

     பல்லுயிர்களையும் ஈன்ற மாட்சிமை பொருந்திய அணிகளையு
டையோய்! அவ்வுயிர்கள் பிழைக்குமாறு எண்ணி அன்பொடும் இவை
கூறினையாகலின் மகிழ்ந்தோம். மனங்கொள்ள விரிப்போம். விரும்பிக்கேட்டி.

மேதகு சிற்பர வியோம ரூபம்நீ
ஓதிய சிற்பர வியோம ரூபியாம்
மாதர்வா ணுதலிஅப் பரம வானமும்
பேதுற ஒழிக்கும் இப் பிலத்து வாரமே.           96

     மேன்மை பொருந்திய ஞானப் பரவெளி வடிவுநீ. அதன் வடிவை
உடையேம் யாம். அழகிய ஒளியுடைய நுதலி! அச் சிதாகாயமும்
மயக்குறவைத் தவிர்க்கும் இக்காமகோடி பிலம்.

மற்றிரு வேங்கட்கும் வடிவ மாகும்அப்
பொற்றனிப் பிலத்தினைப் புண்ணி யஞ்செய்து
பற்றறத் துறந்தவர் காண்பர் பற்றமை
சிற்றறி வுடையவர் தமக்குச் சேயதே.             97

     வடிவமும் வடிவியுமாகிய இருவேமுக்கும் வடிவாகும் ஒப்பற்ற
பிலத்துவாரத்தைச் சிவ புண்ணியத்தினால் இருவகைப் பற்றும் அற்றவர்
தரிசனம் செய்வர். பற்றகலாத சிற்றறிவினோர்க்குப் புலனாகாததே அது.

ஆயிடை மகிழ்ந்தினி துறைதும் ஆய்தொடி
மேயஅப் பிலத்தினும் மிக்க காதலின்
ஏயும்இச் சுடரொளி இலிங்கத் துன்னொடு
மாயிரும் புவிதொழ மன்னி வைகுகேம்.           98

     அழகிய தொடியினை அணிந்தோய்! அங்கண் மகிழ்ந்தினிது
வீற்றிருப்போம். விரும்பிய அம்பலத்தினும் மிக்க விருப்புடன் இச்சுடரொளி
இலிங்கத்தே உன்னொடும் பெரும் புவியோர் தொழும்படி விளங்கி
வீற்றிருப்போம்.

இதற்குமுன் ஈண்டெமை எவருங் காண்கிலர்
இதற்குமேல் நீபெறும் எழில்வ ரத்தினாற்
கதித்திட யாவருங் கண்டு போற்றுக
கதிர்த்தவான் பிலத்திடை உனையுங் காண்கவே.    99

     இதற்கு முன்பு இங்கெம்மை எவரும் காண்கிலர். நீ பெற்ற சிறந்த
வரத்தினால் இந்நாள் முதல் கதியடைய யாவரும் கண்டு வழிபடுக. ஒளி
பொருந்திய தூய பிலத்திடை உன்னையும் கண்டு போற்றுக.

எற்றுநீர்க் காஞ்சியே எமக்கு மேனியாம்
தெற்றெனத் தெளிமதி இனைய சீர்மையான்