பக்கம் எண் :


திருவேகம்பப் படலம் 587


முற்றொளி வானவர் முனிவர் தாமெலாம்
மற்றிவண் விளங்கியும் மறைந்து வைகுவார்.      100

     மோதுகின்ற, நீரையுடைய காஞ்சி எமக்குத் திருமேனியாகும். இதனை
நன்கு தெளிந்துகொள். இச்சிறப்பினால் முதிர்ந்த ஒளியுடைய தேவரும்,
முனிவர் யாவரும் இங்கே தோன்றியும் மறைந்தும் உறையவர்.

உலகஇக் கோயிலின் உறுப்பு முற்றுமாய்க்
குலவிஈங் கெமைத்தொழு துறையுங் கோற்றொடிப்
புலவுவேல் இணைவிழிப் புளகப் பூண்முலை
இலவிதழ் மதிநுதல் இமய மாதராய்.              101

     அழகிய வளையலையும் ஊன் தங்கிய வேலனைய இரு விழிகளையும்
புளகம் போர்த்த கொங்கைகளையும் இலவ மலர்போலும் அதரத்தினையும்
மதியை ஒத்த நுதலினையும் உடைய மலையரையன் பாவாய்! உலகங்கள்
கோயிலின் அங்கங்கள் யாவுமாய் விளங்கி இங்கே தொழுது வைகும்.

அறுசீரடி யாசிரிய விருத்தம்

விரவுசீர் நல்ல கம்பம் விளங்கொளி வெள்ளக் கம்பம்
வரமருள் கள்ளக் கம்பம் வண்டிரு மயானம் வாலீச்
சரமெனும் இலிங்கம் ஐந்தில் தகுபஞ்ச பிரம மாகி
இரவுசெய் குழலாய் நின்னோ டினிதுவீற் றிருப்பங் கண்டாய்.  102

     நல்ல கம்பம் முதலாக முறையே ஈசானமும் சத்தியோ சாதமும்,
வாம தேவமும், அகோரமும், தற்புருடமும், ஆகப் பஞ்சப் பிரமமாகி இருளை
ஒத்த கூந்தலாய்! நின்னொடும் அச்சிவ மூர்த்தங்களுள் வீற்றிருப்போம்
என்றறிதி. இவற்றை முறைப்படுத்திக் கொள்க.

வாலீச்சரம்

என்னலும் இறைஞ்சி நல்வா லீச்சரம் யாங்கண் எந்தாய்
அன்னது கண்டோர் யாவர் அதன்திறம் யாதோ என்னப்
பொன்னவிர் கணங்கு பூத்த பொம்மல்வெம் முலையாள் கேட்பக்
கன்னல்வேள் எரிய நோக்குங் கண்ணுதல் அருளிச் செய்யும்.  103

     உடனே வணங்கி, ‘எந்தையே! வாலீச்சரம் எங்குள்ளது? நிறுவினோர்
யாவர்? வாலீச்சர வரலாறு யாது? என வினவிய இலளிதாதேவி உணருமாறு
கரும்பு வில்லேந்திய காமனை எரித்த கண்ணுதற் பிரானார் அருள் செய்வர்.

வாலிமா இலிங்க மேன்மை கேண்மதி மயானக் கீழ்சார்
சீலமார் சித்தர் பல்லோர் சித்திகள் வேண்டிப் போற்ற
மூலமாய் ஒளியாய் இன்பாய் முகிழ்த்தது வாயு லிங்கம்
ஏலவார் குழலாய் என்றும் மகிழ்ந்தினி் திருப்பேம் அங்கண். 104

     வாலீசர் சிறப்பினைக் கேட்டி. திருக்கச்சி மயானத்தின் கிழக்கில்
ஒழுக்கமுடைய சித்தர் பலர் விரும்பிப் போற்றிச் செய்ய