பிரமன் முன் நின்றும் அம்மை மறைந்தருளி உலகம் உய்யும் வகை ‘சதி‘ என்னும் பேருடன் தக்கனுக்கு மகளாயினர். ஆய நங்கையை விதியுளி அரனார்க் களித்து நான்முகன் அன்னணந் திகழ, மாயி ருஞ்சகம் ஆணொடு பெண்ணாய் வயக்க முற்றன் அகிலநா யகியும், பாயும் வெள்விடைப் பாகரை மணந்து பழித்த தக்கனை வெறுத்தவன் மகண்மை, மேய மேனியை நீத்திமகிரிக்கு மேனை பால்மக ளாய்அவ தரித்து. 14 மகளாகிய அம்மையாரை விதிப்படி பெருமானார்க்கு மணம் செய்வித்துப் பிரமன் அவ்வாறு விளங்கப் பேருலகம் ஆணும் பெண்ணுமாய் விளக்கம் பெற்றன. உமையம்மையாரும் சிவபிரானாரை மணந்து இழித்துரைத்த தக்கனை வெறுத்து அவனுக்கு மகளாந் தன்மையை யுடைய திருமேனியைத் தவிர்த்து இமய மன்னன் மனைவி மேனாதேவிக்கு மகளாக வந் தவதரித்து. அங்கண் மேவிய பிஞ்ஞகன் ஏவற் பணியின் மேவின ளாகமற் றந்நாள், பங்க யத்தவன் நல்கிய வரத்தால் தாருகாசுரன் எனப்பயில் கொடியோன், பொங்கும் ஆண்மையின் உலகெலாம் வருத்தப் பொன்ந கர்க்கிறை குரவனை முதலோர், தங்கு ழாத்தொடும் உசாவிநான் முகத்தோன் றன்னை எய்திஅக் கொடுந் தொழில் இயம்பி. 15 அங் கெழுந்தருளிய பெருமானது திருக்குறிப்பின் நின்றனராக அந்நாளில் பிரமன் வழங்கிய வரத்தைப் பெற்ற தாருகாசுரன் என்னும் கொடிய தானவன் உலகங்களை முற்றவும் வருத்துதலால் இந்திரன் முதலாம் வானவர் பிருகற்பதியை வணங்கி உபாயம் அறிந்து பிரமனை அடுத்துக் கொடுமையைக் கூறி, எந்தை நீஇது தீர்திறம் புகல்என் றிறைஞ்சி வேண்டலுந் திசைமுகப் புத்தேள், அந்த வெந்திறல் தாருகன் செருக்கை அடக்கும் ஆண்மையன் முருகவேள் அன்றிக், கந்த மென்றொடைக் கடவுளர் ஏனோர் வல்ல ரல்லர்அக் கந்தனைத் தருவான், இந்து சேகரன், உமையினை மணக்கும் உபாயம் நீபுரி கெனவிடை கொடுத்தான். 16 எந்தையே! இக் கொடுமை தீரும் வழியைக் கூறுக’ என்று வேண்டிய காலையில், பிரமன், அத்தாருகன் அகந்தையை முருகப் பெருமான் அன்றிப் பிறர் அடக்கும் வலியிலர். அம்முருகனைத் தர உமையம்மையைச் சிவபிரான் திருமணம் கொள்ளும் சூழ்ச்சியைப் புரிதி எனப் போக்கினன். மீண்டு வாசவன் மாரனை நினைப்ப வேனில் வேள்சிலை பகழிகைக் கொண்டு, காண்ட குங்கவின் இரதியும் மதுவும் மருங்கு மேவரக் கடுகிவந் திறைஞ்சி, ஈண்டு நின்னருள் ஆணையின் வலி |