பக்கம் எண் :


தழுவக் குழைந்த படலம் 595


     எழுந்தருளிய பின் வளையணிந்த கையையுடைய அன்னை தன்னைத்
தொழுது நிற்கும் பிரமனைப் பார்த்து உருகிய உள்ளமுடையோனே! நினக்கு
யான் செய்யக் கடவது யாதென வினவப் பிரமன் வணங்கித் திரண்ட
பெருங்கருணையை யுடைய எமது தந்தையாரிடத்துத் தோன்றிய அன்னையே!
நீ பெண் வடிவுகளை முற்றவும் படைத்தருளுக. அல்லையாயின் படைக்கும்
வல்லமையை எனக்கு அருள் செய்க.

     உம்பர் போற்றுநின் திருவடிப் பொடியை உச்சி மேல்கொண்டு
நான்படைக் கின்றேன், அம்பை இன்னம்ஓர் விண்ணப்பம் உளதால்
அடிய னேன்பெறு தக்கன்றன் மகளாய், இம்பர் நீஅவ தரித்திடல்
வேண்டும் என்று வேண்டலும். உலகம்ஈன் றளித்த, கொம்பர்
நுண்ணிடை எம்பெரு மாட்டி கூர்த்த பேரருட் கருணையின்
உணர்த்தும்.                                             11

     தேவர் போற்றுகின்ற தேவரீருடைய திருவடியில் தோய்கின்ற
பொடியைச் சென்னிமேற் றாங்கி அடியேன் சிருட்டித் தொழிலைச்
செய்கின்றேன். அம்பிகையே! மேலும், அடியேன் பயந்த மகனாகிய
தக்கனுக்கு நீவிர் மகளாக அவதரிக்க வேண்டுமென வேண்டுங்காலை
உலகெலாம் ஈன்ற அன்னையார் மீக்கூர்ந்த பேரருளினால் அருள்வர்.

     முழுது மாய்உயிர்க் குயிரெனத் திகழும் முதல்உ ருத்திரன்
என்றிடுஞ் சுருதி, தழுவி ஆங்கவன் இடப்புறம் மேவுஞ் சத்தி
யான்அவன் சத்தியன் அதனால், தொழுத குந்திறல் அவன்திரு
வடிவாம் தொல்ச கங்களின் இடப்புறம் எனதாம், பழுதி லாளநின்
வடிவினைப் பகுத்துதிப் பாதி பெண்மைஆண் பாதியில் திகழ்தி.   12

     யாவுமாய், உயிர்க் குயிராய் விளங்கும் முதல்வர் உருத்திரமூர்த்தி
என் றுணர்த்தும் வேதங்கள், மருவி அவர் இடப்பால் மேவும் சத்தியான்.
அவர் சத்தியை உடையவர். ஆகலின், தொழற்குரிய வல்லமையுடைய
அவர் திருமேனியாகும் பழம் பேருலகங்களில் இடப்புறம் எனக் குரித்தாகும்.
குற்றமற்றவனே! நின் வடிவினைப் பகுத்து இடப் பாதி பெண் தன்மையினும்
வலப்பாதி ஆண் தன்மையினும் விளங்குதி.

     அண்ண லார்அருட் சத்தியுஞ் சிவனும் ஆய தன்மையின்
அன்றுதொட் டுலகம், பெண்மை ஆண்மைஎன் றிருவகைப் புணர்ப்பாற்
பெண்ணும் ஆணுமாய்ப் பிறங்கும்என் றியம்பிப், பண்ணை மாமறைக்
கடவுளுக் கருளிப் பாவை அம்பிகை ஆயிடைக் கரந்து, மண்ணெ
லாம்உய்யச் சதிஎனும் பேரால் வயங்கு தக்கனுக் கொருமக ளானாள். 13

     பெருமானார் சத்தியும் சிவமுமாய் விளங்கும் இயல்பினால். அந்நாள்
முதல் உலகம் பெண்மையும் ஆண்மையும் என இருவகைச் சேர்க்கையால்
பெண்ணும் ஆணுமாக விளங்கும் என்றுரைத்தருளிப்