என்று பொருள்படும் வேறு காயத்திரி மந்திரத்தை உடன் புணர்த்துக் கூறி உலகைச் சிருட்டிக்க மன்னிய திருவருளையுடைய உரிமைப் பொருள் கிடைக்கச் செபித்துப் பெருந்தவம் செய்கையில் இருநாவுடைய பாம்பினைப் பூண்ட பெருமானார் செம்பாதி பெண் வடிவுடைய குவளைக் கண்ணி கூறராய்க் காட்சிதந்து தாமரையை இடமாகவுடைய நீ இம்மந்திரத்தை கணித்தனை. அதனால் நினது விருப்பினை அறிந்தேம். நினக்கு நாயகி இவள்எம திடப்பால் நின்று நீங்குபு தன்னொரு கூற்றால்; உனக்குப் பெண்உருப் படைத்திடும் ஆற்றல் உதவும் என்றுரைத் தருளஅக் கணமே, தனக்கு நேர்வரும் பிராட்டியும் ஆங்குத் தணந்து தோன்றுபு தன்ஒரு கூற்றின், வனப்பு மிக்கவே றணங்கினைப் படைத்து மலர்ப்பொ குட்டணை யவற்கிது வகுப்பாள். 8 நினக்கு முதல்வியாகிய இவள் எனது இடப்புறத்தினின்றும் நீ்ங்கித் தனது ஒரு பங்கினாலே உனக்குப் பெண்வடிவைப் படைத்திடும் ஆற்றலை வழங்கும் என்றருள, அப்பொழுதே தன்னொரு கூறாக விளங்கிய பெருமாட்டியும் பிரிந்து தோன்றித் தனது அமிசமாக அழகு மிகுந்த வேறோர் அணங்கினைத் தோற்றுவித்துப் பிரமனுக் கிதனை வகுத்துரைப்பார். இவளை நாள்தொறும் நீவழி பட்டுப் பெண்கள் யாரையும் படைத்திஎன் றியம்பி, அவளை நோக்கிநின் கூற்றினிற் பெண்கள் அனைத்தும் நீபகுத் திடுகென அருளித், தவள முண்டகக் கிழத்திதன் கொழுநன் றனக்கு நல்கித்தன் தலைவரை மணந்தாள், கவள வெங்கரி உரித்தவர் தாமுங் கருணை செய்துபோய்க் கயிலையைப் புக்கார். 9 இவ்வணங்கினை நாடோறும் நீ வழிபாடு செய்து பெண்கள் யாவரையும் படைப்பாயாக என்று கூறி அவ்வம்மையையே நோக்கி நின்கூற்றினில் பெண்கள் அனைவரையும் நீ வகுத்திடுக என்றருள் செய்து வெண்டாமரையுள் விளங்கும் சரசுவதி நாயகனுக்கு அருள் வழங்கித் தன் தலைவராகிய பெருமானுடன் ஒன்றுபட்டனர். கவளங் கொள்ளும் யானையை உரித்தவரும் கருணை வழங்கிக் கயிலையை அடைந்தனர். புக்க பின்தனைத் தொழுதுபோற் றிசைக்கும் போதி னானைஅவ் வளைக்கையாள் நோக்கி, நெக்க சிந்தையோய் நினக்கியான் புரியும் நிகழ்ச்சி யாதென மலரவன் வணங்கித், தொக்க பேரருள் எந்தையா ரிடத்துத் தோன்றும் அன்னைநீ பெண்ணுரு முழுதுந், தக்க வாபடைத் தருள்கதில் லன்றேற் படைக்கும் ஆற்றலென் றனக்கருள் புரியாய். 10 |