பக்கம் எண் :


628காஞ்சிப் புராணம்


விருப்பப்படும் காரணம், தனு, போகம், புவனமாய் ஆகும்படி வரங்களைப்
பெற்றன. அம்முறையால் உலக முழுதும் பரவிய தன்வடிவமாய் ஓங்கும்
உலகாணித் தீர்த்தக் கரையின் மருங்கில் வந்து,

     ஆணி-எல்லை, முதன்மை, ஆதாரம் என்னும் பொருள் ஆகும்.
‘‘ஆராய்ந்தடித்தொண்ட ராணிப்பொன்’’ (திருநாவுக்கரசர் திருவிருத்தம்)
‘‘தொண்டர்க் காணி’’ (பெரிய புராணம், நமிநந்தி : 32)

ஆங்கினி தமர்ந்து வைகித் தவம்புரி கருத்த ளாகி
ஊங்குடன் அணைந்த விண்ணோர்க் கருள்விடை உதவி அங்குத்
தேங்குநீர் உலகம் உய்யத் திருஅறச் சாலை ஆக்கி
மாங்குயிற் கிளவி நங்கை அறமெலாம் வளர்க்க லுற்றாள்.    137

     அவ்விடத் தினிது விரும்பித் தங்கித் தவஞ்செய் கருத்தினராய் அங்கு
உடன் வந்த தேவர்க்கு அருள் செய்து அவர் தம்மைச் செல்ல விடுத்துக்
கடல் சூழ்ந்த உலகெலாம் பிழைக்கும்படி அங்கே திருஅறச் சாலையை
உண்டாக்கி அறங்கள் யாவும் தழைக்கச் செய்வாராயினர்.

அம்மையார் அறம்வளர்த்தல்

தெய்வம்தென் புலத்தார் பூதம் மானிடம் பிரமம் என்றோர்
ஐவகை எச்சம் பூர்த்தம் துறந்தவர் மடங்கள் அன்பு
செய்யும்இல் வாழ்வார்க் கில்லம் மனைக்குப கரணம் தேம்பூப்
பெய்தமை தண்ணீர்ப் பந்தர் எங்கணும் பிறங்கு சோலை.  138

     தேவயாகம், பிதிர்யாகம், பூதயாகம், மாநுடயாகம், பிரமயாகம்
எனப்பெறும் ஐவகை வேள்வியும், வறியார்க்கு ஈகை, துறந்தவர்க்கு மடம்,
இல்வாழ்வார்க்கு வீடு, இல்லறம் நடத்தவேண்டும் பொருள்கள் நறுமண
மூட்டிய தண்ணீர்ப் பந்தல், சோலை எனப்படும் அறங்களும்,

இரப்பவர் குருடர் எவ்வ முற்றவர்ப் புரத்தல் வெந்நோய்
துரக்கும்நன் மருந்து தூவாய் மகவினை ஓம்பல் சுண்ணம்
பரித்தபா கடையே எண்ணெய் பைம்புனல் குளிப்ப வேண்டும்
மருக்கிளர் துவர்க ளாதி மலரணை நிலன்ஆன் கன்னி.     139

     யாசிப்பவர், குருடர், முதலான உறுப்புக் குறைவால் துன்புறுவோ
ராகிய இவர் தம்மைக் காத்தலும், கொடிய நோய்களைப் போக்கும் மருந்து
கொடுத்தலும், நல்வாய்க் குழலியை வளர்த்தலும், சுண்ணாம்பு கொடுத்தலும்,
பாக்கு வெற்றிலை கொடுத்தலும், தலைக்கெண்ணெய் கொடுத்தலும்,
முழுகுவதற்கு அரைப்புப் பொடிகள் அளித்தலும் படுக்கை வழங்கலும்,
பூதானம், கோதானம், கன்னிகாதானம் எனப் படும் இவையும்,

கடிமணம் விளக்கு மாறாக் கடன்ஒழித் திடுதல் ஈசன்
அடியவர் விழைவ ஈகை அக்கமா மணிவெண் ணீறு
படியிலாக் கடவுட்பூசை உபகர ணங்கள் பாசந்
தடிதரு வேத வாய்மைச் சைவநூல் புராணம் நல்கல்.  140