பக்கம் எண் :


தழுவக் குழைந்த படலம் 627


தீர்த்தமெனக் கூறுவர். சார்ந்து தரிசித்தோர் மரபோடு முய்யச் செய்யும்
அங்கு வழிபாடு செய்த சிவலிங்கமும் கங்கணேச்சரம் எனப்பெயர் பெறும்.

கடகேச்சரம்

நவமணிக் கடகம் பூணும் ஞாங்கருங் கடகே சானச்
சிவபரஞ் சுடரைப் பூசை செய்துதன் கரத்திற் பூண்டாள்
அவிர்மணி நகையாள் போற்றும் அக்குறி இரண்டுங் கண்டோர்
தவலரு மலநோய் மாற்றி முத்தியில் தவிர்ந்து வாழ்வார்.   133

     நவமணிகள் பதித்த கடகத்தை அணிந்த அப்பொழுதும் கடகேசப்
பிரானாரைத் தாபித்துப் பூசை செய்து அதனைக் கரத்திற் றரித்தனர்.
விளங்கும் முத்தனைய முறுவலார் போற்றிய கங்கணேசர் கடகேசராகிய
சிவிலிங்கப் பிரானாரைக் கண்டு வணங்கினோர் கெடலரிய ஆணவமல
நோயைக் கெடுத்து முத்தியில் நிலைபெற்று வாழ்வார்.

அன்னணம் அருச்சித் தேத்தி ஆளுடை எம்பி ராட்டி
உன்னுவோர் பிறவி மாய்க்கும் உள்நகர் வரைப்பின் முற்ற
மன்னிய வளங்க ளெல்லாம் மனங்களி பயப்ப நோக்கிப்
பன்னரும் பெருமை சான்ற பரவெளிப் பிலத்தை யுற்றாள்.   134

     அவ்வகை அருச்சித்துப் போற்றி எம்மை அடிமையாக உடைய
பிராட்டியார் நினைப்பவர்தம் பிறவியைப் போக்கும் நகரில் நிலை பெற்ற
செல்வங்கள் யாவற்றையும் மனமகிழும்படி முற்றவும் கண்டு விவரித்
துரைத்தற்கும் அடங்காத பெருமை அமைந்த பரவெளியாகிய பிலத்தை
அண்மினர்.

உலகாணித் தீர்த்தம்

ஐம்பெரும் பூதம் முன்னாள் ஆயிடை மலர்ப்பூம் பொய்கை
தம்பெயர் நிறுவித் தொட்டுத் தடந்திரை கொழிக்குந் தூநீர்ப்
பைம்புனல் படிந்து பன்னாள் மெய்த்தவம் பரிக்குங் காலைக்
கம்பனார் கருணை கூர்ந்து காட்சிதந் தருளப் போற்றி.    135

     பிருதிவி முதலிய பஞ்சபூதங்கள் அங்கண் மலர்களை யுடைய
பொய்கையை வகுத்துப் பஞ்சதீர்த்தம் என்று தம்பெயரை அத்தீர்த்தத்திற்கு
நிறுவிப் பேரலை மறித்து வீசும் அத்தூய நீரில் மூழ்கிப் பலநாளும்
உண்மைத் தவத்தை மேற்கொள்ளுங் காலத்துத் திருவேகம்பனார் அருள்
சுரந்து திருக்காட்சி தரத் தரிசித்துத் துதி செய்து.

மூவருந் தம்முட் கூடல் முதலிய வேறு பாட்டான்
மேவருங் கரணம் யாக்கை விடயம்ஆ தாரம் எல்லாம்
ஆவகை வரங்கள் பெற்ற அத்திறத் துலக முற்றும்
பாவுதன் வடிவாய் ஓங்கும் உலகாணிக் கரையின் பாங்கர்.  136

     கெடுதலில்லாத பஞ்சபூதங்களும் குறைந்தும், ஒத்தும், மிகுந்தும்,
ஒன்றும்பலவும் கூடாதும் இங்ஙனம் ஆகிய பல்வேறு திறத்தினால்