ஏழ் பொது இடங்கள், எட்டுப் பொய்கைகள், ஒன்பது கற்கள், ஒன்பது சோலைகள், பத்துச் சபைகள், பதினொரு கிணறுகள் ஆங்குள்ளன. மூன்று இடங்கள் ஒன்று பல்பவத் தாதையர்க் காட்டிடும் ஒளிசேர் ஒன்று பல்பவத் தாயரை வேண்டுறிற் காட்டும் ஒன்று பல்பவக் கிளைஞரோ டுரைபயில் விக்கும் என்று மூவகைத் தானம் அவ் விருநகர் உடைத்தால் 7 | ஓரிடம் காண விரும்பின் பல் பிறவிகளில் வாய்த்த தந்தையரைக் காட்டும்; மற்றோர் ஒளிசேர் இடம் பல் பிறவித் தாமரை விரும்பிற் காட்டும்; பிறிதோரிடம் பல்பிறவிச் சுற்றத்தவரோடு சோதித்துப் பேசுவிக்கும். என்றிங்ஙனம் மூவகை யிடமும் அப்பெரிய நகரம் உடையது. மூன்று தெற்றிகள் ஊங்க ணைந்தவர்க் கழுதுநீர் உதவிடும் ஒன்று பாங்கின் வேட்டன யாவையும் பயந்திடும் ஒன்று மூங்கை பேசவும் பேசினோன் மூங்கைமை யுறவும் ஆங்க ளிப்பதொன் றாகமுத் தெற்றியும் உளவால். 8 | தன்னை அடுத்தவர்க்குச் சோறும் நீரும் வழங்கும் ஓர் தெற்றி. நன் முறையில் விரும்பிய பொருள்கள் எவற்றையும் நல்கிடும் ஓர் திண்ணை. ஓர்மேடை ஊமையைப் பேசுவிக்கும்; பேசுவோனை ஊமை ஆக்குவிக்கும். மூன்று தெற்றிகள் இத்திறத்தன உள்ளன. மூன்று வயல்கள் மீள மீளநெல் அரிதொறும் விளைவதோர் பழனம் நாளின் வித்தும்அன் றேபயன் நல்கும்ஓர் கழனி தாளின் ஏருழ வின்றியே தகும்பயிர் விளைக்கும் கோள தொன்றென வயல்கள்மூன் றுள்ளன குறிக்கில். 9 | மூன்று வயல்களில் ஒன்று நெல் லறுக்குந்தோறும் விளைந்து முற்றும்; ஒன்று விதைத்த அன்றே பயன் தரும்; ஒன்று உழவின்றியே விளைக்கும். இவ் வற்புத வயல்கள் உள்ளன. நான்கு தவிசுகள் எண்சீரடி யாசிரிய விருத்தம் தனக்குப்பின் மூவரொடு முனிவர் விண்ணோர் பழிச்சிட வாழசதுமுகனைக் காட்டும் ஒன்று, தன்பகுப்பின் மூவர்திரு முதலோர் திருமாலைச் சார்தோர்க்குக் காட்டும் ஒன்று, தன்பகு போற்றுந் தழற்கால |