காலம் - அறுசீர் விருத்தம் |
49. அமைதிரு வள்ளு வத்தீ ராயிரத் திருபான் மூன்றில் இமையுமா யிரத்துத் தொள்ளா யிரத்தொடு நாற்பத் தாறில் அமைவுறக் குழந்தை நன்காய்ந் தருந்தனித் தமிழ்ப்பா வாக்கக் கமையுறு தமிழர் மேலோன் காவியஞ் சமைந்த வாறே. |
நூற்பயன் |
50. தந்நிலை யுணர்ந்து வாய்மைத் தமிழர்க ளடிமை வாழ்வாம் இந்நிலை தவிர்ந்து முன்ன ரிழந்தத முரிமை யெய்தி முன்னிலை யடைந்து வாழு முறையொடு வாழ்வர் வீரக் கன்னிலை நின்ற மேலோன் காவியம் பயிலு வோரே. ------------------------------------------------------------------------------------------ 49. இமையும் - நிகழும். கமை - பொறுமை. திருவள்ளுவம் - வள்ளுவராண்டு. இருபான் மூன்று இல் ஈராயிரத்து - 1977. அறுசீர் விருத்தம் - அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம். இவ்வாறே எழுசீர், எண்சீர்விருத்தம் எனவுங் கொள்க. |