பக்கம் எண் :


இராவண காவியம் 129

   
                 ஆசிலாத் தனித்த நடையுமா கியவிவ்
                      வறுவகைச் சிறப்பொடு பொலிந்து
                 மாசிலா மணியா யொளிர் தமிழ்த் தாயை
                      வடகுட மாதரொப் பாரோ?

         10.      ஏயதங் கருத்தை யுரைத்திடும் பாட்டு
                      முரையுமா கியமுத லியலும்
                 மேயவப் பாட்டைப் பண்ணொடு திறனு
                      மேவுற விசைத்திடு மிசையும்
                 வாயவவ் விரண்டோ டுளப்படு கருத்தை
                      மனக்கொள நடிக்குநா டகமும்
                 ஆயமூ வுறுப்பி தனையுறுப் பறையென்
                      றறைகுவ ரறிவிலா வெறியர்.

         11.       ஒருவகை யொலிப்பு மிருவகை வழக்கு
                      முரியமுப் பெயருநாற் பாவும்
                 இருதகை வருமைந் தியலுமா றுறுப்பு
                      மெழுவகைத் திணையுமெண் வனப்பும்
                 மருவிய வொன்பான் சுவையும்பத் தழகும்
                      வகைபட வமைதமிழ் மொழியைத்
                 திருகிய மனத்தார் சிறப்பிலை யென்று
                      செப்பினொப் பவர்பொறுப் பவரே.
------------------------------------------------------------------------------------------
         10. வாய - வாய்த்த. 11. இருதகைவரும் - மிகத்தகுதி வாய்ந்த. இயல் -
இலக்கணம். இருவகை வழக்கு - உலக வழக்கு, செய்யுள் வழக்கு. முப்பெயர் - இயல்,
இசை, நாடகம். நாற்பா - வெண்பா, ஆசிரியம், கலி, வஞ்சிப்பா. ஐந்திலக்கணம் -
எழுத்து, சொல், பொருள், யாப்பு, அணி. ஆறுறுப்பு - எழுத்து, அசை, சீர், தளை, அடி,
தொடை. எழுவகைத்திணை 8-ஆம் பாட்டில் காண்க. வனப்பெட்டு - அம்மை, அழகு,
தொன்மை, தோல், விருந்து, இயையு, புலன், இழைபு. ஒன்பான் சுவை - நகை. அழுகை,
இழிவு, வியப்பு, அச்சம், வீரம், வெகுளி, உவகை, நடுநிலை. பத்தழகு - சுருங்கச்
சொல்லல் முதலியன. (மரபியல் - 109