6. அம்முதல் னௌவீ றாகிய வெழுத்தை யறிந்தவ ரெளிதினிற் றாமே தம்முறு துணையாத் தடைசிறி தின்றித் தமிழறி வுடையவ ராவர் அம்முறை மேலு முயன்றிடிற் புலமை யடைகுவ ரையமின் றிதைப்போற் செம்மொழி வேறொன் றுளதெனப் புகல்வோர் தெரிதர வுரைக்கமுன் வருவீர். 7. சொற்றொறும் பொருளின் சிறப்புமப் பொருளிற் சொற்பொருந் துறவமை சிறப்பும் சொற்றொட ரமைவின் சிறப்புமத் தொடரிற் சொற்பொரு ளமைதியின் சிறப்பும் கற்றொறு முள்ளங் களிக்கவத் தொடரிற் கருத்தமைத் திருக்குநற் சிறப்பும் பெற்றுள தமிழ்த்தாய்க் கினியொரு சிறப்புப் பேசுவ தெனதவாப் பெருக்கே. 8. ஒருமொழி யேனு மினையநாள் காறு முலகெலாந் தேடியு மடையா இருவகைக் கைகோ ளன்பினைந் திணையோ டெழுதிணை யகம்புற மென்னும் பொருளினை யுடைய பழந்தமிழ்த் தாயைப் பொருளிலா ளெனப்புகல் பொய்யர் மருளினை யுண்மைப் பொருளென மதிப்போர் மதியினுக் குவமையம் மதியே. 9. பேசுநற் குணமு மெழுதெழில் வனப்பும் பெரியர்சொற் கடந்திடா வொழுக்கும் வீசொளி மணிப்பூண் பெருக்குமே வரிய முதுமையோ டிளமையும் வேறோர் ------------------------------------------------------------------------------------------ 8. இருவகைக்கை கோள் - களவு, கற்பு. அகத்திணை ஏழாவன - குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை, பெருந்திணை, கைக்கிளை என்பன. இவற்றிற்கு முறையே வெட்சி, வஞ்சி, உழிஞை, தும்பை, வாகை, காஞ்சி, பாடாண் என்பன புறத்திணைகளாகும். 9. பெரியர் சொற்கடவாமை - இலக்கணவரம்புடைமை. மணிப்பூண் பெருக்கு - இலக்கியப்பரப்பு. | |
|
|