2. பரிதியி லிருந்து சிதறிய வுலகப் பகுதியில் முதலினிற் குளிர்ந்து பெரிதுயிர் வகைகள் முதன்முதல் தோன்றப் பெற்றது பழந்தமி ழகமே; வருதமி ழகத்து மக்களே யுலக மக்களுக் கொருமுதல் மக்கள் தருமுதல் மக்கள் பேசிய மொழிசெந் தமிழெனில் இதற்கிணை யெதுவோ. 3. இனியசெந் தேனு மினியவான் பாலு மினியதீஞ் சுவைநிறைந் தியலும் கனியதன் சாறுங் கரும்பினின் சாறுங் கனிவரு முதலவின் பருப்பும் இனியவின் சுவையொன் றேயுளங் கேட்டற் கினிமைநம் பாலிலை யென்று கனியவுள் ளுருகிக் கவன்றிட விரங்கிக் கைசெயுங் கனிதமிழ் மொழியே. 4. உரப்பியுங் கனைத்து முடிமுத லடிநாக் குழறியுங் குழறியு முயிர்ப்பை நிரப்பியுங் கழுத்தி னெஞ்சினி லிதழை நெகிழ்த்துமுள் ளுயிர்ப்பது வெளியில் வரத்துணை யின்றித் திணறியு மெழுத்தை யொலித்திடும் வருத்தம தின்றிப் பொருத்திய வாயைத் திறக்கவா றைந்தும் புறப்படு மெளியசெந் தமிழே. 5. எழுத்தொலி வேறா வொவ்வொரு சொல்லி னிடத்துமவ் வொலிகள்வெவ் வேறா அழுத்தவோர் பொருளா நெகிழ்க்கவோர் பொருளா வவற்றிடை நலியவோர் பொருளா எழுத்தொரு பயனு மின்றியாங் கடுக்கா வினையன வேற்றுமை பலவா வழுப்பட லின்றி யெலாமொரு வகையா வமைந்தது வண்டமிழ் மொழியே. ------------------------------------------------------------------------------------------ 3. கைசெய்தல் - உதவுதல். | |
|
|