பக்கம் எண் :


138புலவர் குழந்தை

   
ஷெ வேறு வண்ணம்
        20.     ஒன்றுதிரு வள்ளுவராண் டொருபத்தோ டிருபத்தின்
                    ஒன்றின் முன்னே
               சென்றிடுமூ வாயிரத்தத் தீயாழி தென்பாலாஞ்
                    செழிய நாட்டின்
               ஒன்றுபெரும் பகுதியையு மிந்திரத்தோர் பகுதியையு
                    முணவ தாக
               மென்றுசுவைத் துண்ணாமல் தமிழ்த்தாய்கண் ணீர்வடிக்க
                    விழுங்கிற் றந்தோ.
 
ஷெ வேறு வண்ணம்
 
        21.     யாழுங் குழலும் பலபறையும் யாழோ ராடு மாடரங்கும்
               போழும் பனையே டுந்தோய்ந்த பொதிபொ தியான தமிழ்நூலும்
               வாழும் பொருளும் நிலபுலமும் மனையோ டினவும் வாய்க்கொண்ட
               பாழுங் கடலே. நீயொருநாட் பாழாய்ப் போகக் காணேமோ.

        22.     வாரா யெனவே கைகோத்து மலர்வாய் மோந்து முத்தாடிச்
               சீராய் வளர்த்த கோத்தாயின் சீரைக் குலைக்கச் சினந்துவரும்
               நேரார் காலைக் கும்பிட்டு நேரா நின்று நேரொன்றும்
               பாரார் போலப் பாழ்ங்கடலே பகையாய் நின்று புகையாயே.

        23.    பாட்டைக் கேட்டங் கேதேனும் பரிசுகொ டாதோ டமையாதவ்
               வேட்டைத் தீயிற் போட்டோட்டு மிழிஞர் போல வெறிகடலே
               மூட்டை மூட்டை யாப்பாட்டை முதுகிற் கொண்டு மமையாதந்
               நாட்டைக் கொண்டா யினியெங்கள் நண்ணார் குழுவை நண்ணாயே.

        24.     கட்டாய் நின்று தமிழ்நாட்டைக் காத்து வந்தே கைக்கொண்டு
               விட்டா யோவாப் பாழ்ங்கடலே மெய்காப் பாள ராயிருந்து
               பட்டா வுருவித் தலைவெட்டும் பகைவர் முன்னம் பல்லிளிக்கும்
               ஒட்டார் போலப் பகைவாழ்வி னுவறா நின்று சுவறாயே.
------------------------------------------------------------------------------------------
        20. ஒருபத்தோடு இருபத்தின் ஒன்று - முப்பத்தொன்று. வள்ளுவராண்டுத்
தொடக்கம் கி.மு. 31. 21. போழ் - செப்புத் தகடு. 22. நேராநின்று - நேர்ந்து. நேர் -
நேர்மை. 24. உவறுதல் - பெருகுதல். சுவறுதல் - வற்றுதல்.