பக்கம் எண் :


இராவண காவியம் 17

   
                  ஆராய்ச்சி முன்னுரை
 
                 அறிஞர் அண்ணா அவர்கள்
 
     இராவண காவியம் - திடுக்கிடுகிறீர்களா? அப்படித்தான் இருக்கும். பன்னெடுங்
காலமாக இராமாயணம் படித்தும், படிக்கப் பக்க நின்று கேட்டு வந்த மக்களல்லவா!
அவர்களின் செவிக்கு, இராவண காவியம் என்ற ஒலியே சற்றுக் கிலி தருவதாகத்தான்
இருக்கும். எனினும், இந்நூல் எதிர்பாராத தல்ல. காலத்தின் விளைவு, ஆராய்ச்சியின்
அறிகுறி, புரட்சிப்பொறி என்று பல கூறலாம் இதற்குக் காரணமாக. இதுபோல் ஒரு நூல்
வெளிவந்தே தீரும் என்பதை, நாட்டு மக்களின் உள்ளத்தின் போக்கிலே ஏற்பட்டு
வரும்புதிய எழுச்சியை அறிந்தோர், அறிந்திருந்தனர். புரட்சிக் கவிஞர் பாரதிதாசன்,
இதனை அறிவித்தே விட்டார் பல ஆண்டுகளுக்கு முன்னரே,              
              
  ழுதென்றிசையைப் பார்க்கின்றேன் என்செய்வேன் என்றன்
 சிந்தையெலாம் தோள்களெலாம் பூரிக்கு தடடா!ழு
 
      என்பது கவிஞர் கூற்று.

     இராவண காவியம், புரட்சிக் கவிஞர் புதுக் கவிதைபோல், புதிய தமிழகத்தின்
ஓவியம். இதனுடைய நோக்கம், முன்னுள்ள