பக்கம் எண் :


238புலவர் குழந்தை

   
        25.     பூவையோ டொருங்கு தேர்மிசைச் சென்று
                     புனல்விளை யாடியும் புதுப்பூங்
               காவொடு கான லாடியும் பலவாக்
                     களித்தினு மின்புறு தக்க
               யாவுமே வுறவில் லாதன வின்றி
                     யறம்பொரு ளின்பமு முற்றிப்
               பாவலர் பாட்டின் பொருளுமப் பாட்டின்
                     பயனுமா யினிதுவாழ்ந் திருக்க.

        26.     திங்களைப் பழித்துத் தாமரை குவித்துத்
                     தெளிவுற விளங்குசெம் முகத்து
               மங்கையுங் கருப்ப முற்றொரு பத்து
                     மாதமு நிறைவுறத் தமிழர்
               தங்களக் குயிரி னுறையுளாய் வாழுந்
                     தமிழகத் திறைவனாய் விளங்க
               மங்கலம் பொருந்தப் பழந்தமி ழுலகம்
                     மகிழவோர் மைந்தனை யீன்றாள்.

        27.     ஈன்றவக் குழந்தை திருமுக நோக்கி
                     யிறைவியும் பெருமகிழ் பூப்ப
               ஆன்றவன் பெரிது மகிழ்ந்துமே தாய்நெய்
                     யாடிய பிறகுமூ மூத்த
               சான்றவ ரோடு கூடியே மதியைத்
                     தரித்திரு குவளையும் பூத்த
               மான்றரு மணியே செங்கதிர்ச் சேயோன்
                     வருகெனத் திருப்பெய ரிட்டான்.

        28.     செங்கதி ரொளியிற் சிறந்துசெவ் வென்று
                     திகழ்தரு நிறமுடைச் சேயோன்
               மங்கலம் பொருந்த வளர்மதி போல
                     வளர்கெனத் தமிழர்கள் வாழ்த்தப்
               பொங்கொளி வேலோன் பொதிபொதி யாகப்
                     பொன்னையும் மணியையும் வீசி
               மங்கையுந் தானுங் காதலங் கனியாம்
                     மகனொடு மூவரா யிருந்தான்.
------------------------------------------------------------------------------------------
        25. யாவும் மேவுறவு இல்லாதன இன்றி - யாவுமெய்தி. (கற் - 50.) 27. செங்கதிர் சேயோன் - செங்கதிர் போன்ற சேயோன் (கற்-5:14.15) 27. கற்-5:15