7. சிற்ற ரசருந் திருவுடை மூவரு முறையே பெற்ற தாயினும் பெட்புற வறநெறி பேண மற்றை யோர்களின் மாபெருந் தலைவனாய் மக்கட் கொற்றை யச்சமு மின்றியே காத்தன னுரவோன். 8. திங்க ளோர்முறை நேரினில் முறைசெயத் திறலோன் தங்கு மண்டப மமைத்தன னொன்றது தனியா எங்கு மேகுறை யின்மையோ டிகலுமாங் கிலையால் அங்கு வந்தொரு குடிகளுங் கால்மிதித் தறியார். 9. ஆண்டி னுக்கொரு முறைதமி ழகவர செல்லாம் ஆண்டு வந்தர சியனடை முறைகளை யாய்ந்து வேண்டி யாவையும் வகுத்துமே வகுத்ததை மேனாள் ஆண்டு மேகுடி காத்துவந் தானம தண்ணல். 10. அன்ன பேரவை தன்னிலே யருந்தமிழ் புரக்கும் மன்ன ராகிய புலவரும் வந்தினி திருந்து தன்னி கர்தமிழ் மொழிவளர் தகவினை யாய்ந்து மன்னர் மன்னவன் மனக்கொளச் செய்வது வழக்கம். 11. அந்த நாள்வர வமைச்சரு மவரவர் தமக்குச் செந்த மிழ்த்திரு முடங்கலாற் றெரிவுறச் செய்ய வந்தி யாவரும் வான்றொடு மணிமதி லிலங்கை எந்தை வாழ்திருக் கோயிலைக் குறுகின ரிருந்தார். 12. வினைவ லார்களு மமைச்சரும் வேண்டுவ செய்ய இனிய தாமரை மலர்ந்தெதிர் பார்த்தவ ரிருப்ப அனைய மண்டப மணுகிமா மேடையி லமைந்த புனையி ருக்கையிற் பொன்னொடும் பொலிந்தனன் புகழோன். 13. அவையி ருந்தவ ரெழுந்துமே வணங்கிட வண்ணல் நவையி லீரம ருகநல மோவெனை நயந்தே இவைய நல்வர வாகுக வெனவுயர் முகமன் சுவைய கூறியே தொடங்கினன் றுலங்குதொல் லவையே. ------------------------------------------------------------------------------------------ 9. மேனாள் - பின்னர். ஆண்டு - கையாண்டு. 13. இவைய - இங்கே வந்தது. சுவைய - இனிமையாக. | |
|
|