பக்கம் எண் :


இராவண காவியம் 255

   
         79.    கல்வியொடு நிலவளமுங் கைத்தொழிலும்
                    வாணிகமுங் கலந்தா ராய்ந்தே
               நல்வகையி லவையினிது நடக்கும்வகை
                    தமைத்தேர்ந்து நாடாள் வோருக்
               கொல்வனவெல் லாங்குழுமி யொருங்காய்ந்து
                    மனங்களிகூர்ந் துலகாள் மன்னன்
               சொல்வளஞ்சே ரிசையரங்கு மாடரங்குந்
                    தனித்தனியே சுவைத்தான் மன்னோ.

         80.    புலவருக்கும் பாணருக்கும் விறலியர்க்கும்
                    கூத்தருக்கும் பொருந ரோடே
               இலகுமிசைக் கருவியர்க்குந் தகுதியுறப்
                    பரிசில்பல வியல்பி னீந்து
               நிலவுமொளி யோன்பிரியா விடையோடு
                    பலசிறப்பும் நேர்ந்தெல் லோரும்
               செலவினிது தமிழகத்தைத் தேவியொடுங்
                    காத்துவந்தான் சிறப்பின் மன்னோ.
 
           இரண்டாவது இலங்கைக் காண்டம் முற்றிற்று.