பக்கம் எண் :


254புலவர் குழந்தை

   
        75.     போர்த்தொழிற்கு மனைவாழ்க்கைப் புதுத்தொழிற்கும்
                    நல்லுணவைப் போற்றிக் காக்கும்
               ஏர்த்தொழிற்குங் குடித்தொழிற்கு மேற்புடைய
                    கைத்தொழில்க ளியல்பின் மிக்க
               சீர்த்தொழிற்கண் படச்செய்தல் நிலங்காப்போர்
                    தமக்குரிய செயலே யென்று
               நீர்த்தொழிற்குச் சிறந்தானை முகநோக்க
                    வவனெழுந்து நின்று சொல்வான்.

        76.     உலகிலிலா மணப்பொருளு மணியணியுஞ்
                    சங்கணியு முலகம் போற்றும்
               இலகிடுபொற் பட்டினொடு மயில்நூல்பஞ்
                    சாடைமுத லியன்ற வெல்லாம்
               கலநிறையக் கொடுவெளிநா டுற்றிறக்கிப்
                    பொன்சுமந்து கரையை நோக்கிப்
               பலகலங்கள் வருவதும்போ வதுமொழியாக்
                    கடலையென்றும் பார்க்க லாமே.

        77.     நானிலத்துப் படுபொருளும் மரக்கலங்கள்
                    கொடுபோந்து நனிகூர் நல்கும்
               மேனிலத்துப் படுபொருளுந் தலைமயங்கி
                    யொருவருக்கும் விலக்கின் றாகிக்
               கோனிலத்துப் படுபொருள்போற் றமிழகமெல்
                    லாங்கொண்டு கொடுக்க நாளும்
               வானிலத்துப் படுபொருளி னொளிபோலப்
                    பொருணுழையா மனையொன் றின்றே.

        78.     எனவணிகன் மொழியவிறை யியல்வணிக
                    ரேறேபொன் னில்லா தெந்த
               வினைபுரிய வியலுமதால் வாணிகமு
                    முழவினொரு வினையே யாகும்
               புனல்வளமு நிலவளமும் பொருள்வளமுங்
                    கடல்வளமும் பொருந்தி மேலும்
               மனவளமு நிறையவுள தமிழருக்கீங்
                    கொருகுறையும் வருவ துண்டோ.
-------------------------------------------------------------------------------------------
        77. மேல் - மேற்கு. கோன் நிலம் - அரண்மனை. 78. உழவின் ஒருவினை - உழவுப்போலச் சிறந்த தொழில்.